சியோமியின் புதிய செக்யூரிட்டி கேமரா ரெடி.. 256ஜிபி மெமரி.. நைட் விஷன், 360 டிகிரி கவரேஜ்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி302 (Xiaomi Smart Camera C302) மாடலை விரைவில் உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய செக்யூரிட்டி கேமரா அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும்.அதுவும் ஏஐ அம்சங்கள் மற்றும் அல்ட்ரா எச்டி வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டது இந்த கேமரா. இப்போது இந்த புதிய கேமராவின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சியோமி ஸ்மார்ட் கேமரா சி302 அம்சங்கள் (Xiaomi Smart Camera C302 specifications): 3எம்பி சென்சார் இந்த புதிய சியோமி கேமராவில் உள்ளது. மேலும் 2,304 x 1,296 ரெசல்யூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி302. குறிப்பாக இந்த கேமரா மூலம் தெளிவான வீடியோ பதிவு செய்ய முடியும்.

டூயல் ஆக்சிஸ் பான்-டில்ட்-ஜூம் மோட்டார் உடன் 360-டிகிரி கவரேஜை ஆதரிக்கிறது சியோமி ஸ்மார்ட் கேமரா சி302 மாடல். மேலும் சியோமி ஹோம் ஆப் (Xiaomi Home app) இந்த புதிய சியோமி செக்யூரிட்டி கேமராவை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த கேமராவை நேராகவோ அல்லது தலைகீழாகவோ பொருத்தலாம் என சியோமி நிறுவனம் கூறியுள்ளது. பழைய செக்யூரிட்டி கேமரா வடிவங்களுடன் ஒப்பிடும்போது 50% வரை சேமிப்பு இடத்தையும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடனும் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி302 மாடல் வெளியாகும்.
சியோமி ஸ்மார்ட் கேமரா சி302 மாடலில் நைட் விஷன் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் இது தெளிவாக வீடியோ பதிவு செய்யும். மேலும் முழுமையான இரவு நேரங்களிலும் சிவப்பு ஒளியில்லாமல் தெளிவான கருப்பு-வெள்ளை காட்சிகளைப் பதிவு செய்யும் ஆறு இன்ஃப்ராரெட் லைட் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி302 மாடலில் உள்ள AI அம்சம் உங்கள் வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது. பின்பு இந்த சியோமி கேமராவில் MJA1 பாதுகாப்பு சிப் உள்ளது. இது மேம்பட்ட டேட்டா பாதுகாப்பு தருகிறது.
வைஃபை 6, புளூடூத் கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் சியோமி ஸ்மார்ட் கேமரா சி302 மாடல் வெளிவரும்.பின்பு அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் மூலம் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவும் இதில் கிடைக்கிறது. அதேபோல் பில்ட்-இன் மைக்ரோஃபோன் மற்றும் பெரிய ஸ்பீக்கருடன் டூ-வே வாய்ஸ் கால்ஸ் (two-way voice calls) சப்போர்ட் வழங்குகிறது இந்த சியோமி கேமரா.
256ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்டோரேஜ் ஆதரவை வழங்குகிறது இந்த புதிய செக்யூரிட்டி கேமரா. மேலும் கிளவுட் ஸ்டோரேஜ் ஆதரவும் இந்த கேமராவில் உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி302 மாடல் செயல்படும்.
இந்த புதிய கேமரா பட்ஜெட் விலையில் வெளியாகும். குறிப்பாக முதலில் சியோமி ஸ்மார்ட் கேமரா சி302 மாடல் ஆனது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








