Home
Camera

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. டூயல் லென்ஸ்.. AI அம்சம்.. புதிய Xiaomi கேமரா அறிமுகம்.. என்ன விலை?

சியோமி நிறுவனம் புதிய செக்யூரிட்டி கேமராவை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சியோமி ஸ்மார்ட் கேமரா சி300 டூயல்-கேமரா எடிஷன் (Xiaomi Smart Camera C300 Dual-Camera Edition) தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சியோமி ஸ்மார்ட் கேமரா சி300 டூயல்-கேமரா எடிஷன் அம்சங்கள் (Xiaomi Smart Camera C300 Dual Camera Edition specifications): டூயல்-லெனஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த புதிய கேமரா. எனவே இந்த கேமராவை கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு காட்சிகளை படம்பிடிக்க முடியும். அதாவது ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வீடியோ பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. புதிய Xiaomi கேமரா அறிமுகம்.. என்ன விலை?

குறிப்பாக இருட்டான இடங்களில் கூட தெளிவாகப் படம்பிடிக்கும் திறன் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி300 டூயல்-கேமரா எடிஷன். முன்பு குறிப்பிட்டபடி, இதில் கேமரா டூயல் லென்ஸ் இடம்பெற்றுள்ளன, அதில் ஒவ்வொன்றும் 3 மெகாபிக்சல் அளவைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த கேமரா 2304 x 1296 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன.

அதேபோல் 6மிமீ பான்-டில்ட் டெலிஃபோட்டோ லென்ஸ் (6mm pan-tilt telephoto lens) மற்றும் 2.88மிமீ ஷார்ட்-ஃபோகஸ் ஃபிக்ஸட் லென்ஸ் (2.8mm short-focus fixed lens) என இரண்டு கேமராக்களும் இணைந்துள்ளன. எனவே இந்த செக்யூரிட்டி கேமரா தெளிவான படங்களை
பதிவு செய்யும்.

இந்த புதிய செக்யூரிட்டி கேமரா AI ஹியூமன் ரெகக்னிஷன் அம்சத்துடன் வருகிறது. இது உங்கள் வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது. குறிப்பாக இந்த கேமராவின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. புதிய Xiaomi கேமரா அறிமுகம்.. என்ன விலை?

அதேபோல் 940nm இன்ஃப்ராரெட் ஃபில் லைட்ஸ் (940nm infrared fill lights, 360 டிகிரி ஹரிசான்டல் வியூவிங் ஆங்கிள் (360-degree horizontal viewing angle), 88 டிகிரி வெர்ட்டிக்கல் வியூவிங் ஆங்கிள் எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி300 டூயல்-கேமரா எடிஷன். மேலும் Xiaomi Pengpai Intelligent Link தொழில்நுட்பத்துடன் இணக்கமானது இந்த புதிய சியோமி கேமரா

ஆனால் தற்போது சியோமி ஸ்மார்ட் கேமரா சி300 டூயல்-கேமரா எடிஷன் ஆனது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த கேமரா இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சியோமி ஸ்மார்ட் கேமரா சி300 டூயல்-கேமரா எடிஷன் விலை 299 yuan (இந்திய மதிப்பில் ரூ.3,425) ஆக உள்ளது.

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. புதிய Xiaomi கேமரா அறிமுகம்.. என்ன விலை?

மேலும் சியோமி நிறுவனம் நாளை இந்தியாவில் சியோமி 14 சிவி (Xiaomi 14 Civi) போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த போன் பிளிப்கார்ட் மற்றும் சியோமி தளங்களில் விற்பனைக்கு வரும். 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி போன்.

குறிப்பாக 1.5கே அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 16ஜிபி ரேம், 512ஜிபி மெமரி, 4700எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 14 சிவி போன். மேலும் ரூ.45,000 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
xiaomi smart camera c300 dual camera edition launched check specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X