Home
Camera

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. 256ஜிபி மெமரி.. AI அம்சம்.. அறிமுகமானது புது Xiaomi கேமரா.. எந்த மாடல்?

சியோமி (Xiaomi) நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, கேமரா, டேப்லெட் எனப் பல சாதனங்கள் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 (Xiaomi Smart Camera C100) எனும் செக்யூரிட்டி கேமராவை அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம்.

அதாவது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடல் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சியோமி செக்யூரிட்டி கேமராவின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. அறிமுகமானது புது Xiaomi கேமரா.. எந்த மாடல்?

சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 அம்சங்கள் (Xiaomi Smart Camera C100 specifications): 2304×1296 ரெசல்யூஷனில் வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது இந்த கேமரா. அதுவும் இந்த சாதனத்தில் 3 மெகாபிக்சல் சென்சார் வசதியும் உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த செக்யூரிட்டி கேமரா தெளிவான வீடியோக்களை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 128° வைடு ஆங்கிள் லென்ஸ் (128° wide-angle lens) மற்றும் எப்/1.6 அபெர்ச்சர் ( f/1.6 aperture) ஆதரவும் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடலில் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் தெளிவான வீடியோக்களை பதிவு செய்ய 940என்எம் இன்பிராரெட் எல்இடி (940nm infrared LED) அம்சமும் இந்த புதிய கேமராவில் உள்ளது.

இந்த புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடலில் மேம்பட்ட AI அம்சங்கள் உள்ளன. அதன்படி இந்த கேமராவில் உள்ள AI அம்சம் உங்கள் வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது.

சியோமி ஹோம் ஆப் (Xiaomi Home app) மூலம் குரல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த கேமராவுக்கு அருகில் உள்ளவர்களை எளிமையாகத் தொடர்பு கொள்ளலாம் என நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு அக்குஸ்டிக் எக்கோ கேன்சலேஷன் (Acoustic Echo Cancellation) மற்றும் Noise Suppression போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் பயன்படுத்தப்படுகிறது.

Take a Poll

ஆண்ட்ராய்டு 8.0 மற்றும் ஐஒஎஸ் 12.0 ஆகிய பதிப்புகள் முதல் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைஃபை 6, புளூடூத் 5.2 ஆகிய கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த செக்யூரிட்டி கேமராவில் உள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) மற்றும் அமேசான் அலெக்சா (Amazon Alexa) ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி கேமரா.

சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடலில் 256ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த கேமராவின் எடை 170 கிராம் ஆகும். ஆனால் இந்த சாதனம் தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த செக்யூரிட்டி கேமராவின் விலையை வெளியிடவில்லை அந்நிறுவனம். விரைவில் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடலின் விலை வெளியிடப்படும். அதேபோல் இந்த கேமரா இந்தியாவிலும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Camera C100 launched in global market: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X