வாங்குனா இந்த செக்யூரிட்டி கேமரா வாங்கனும்.. 256ஜிபி மெமரி.. AI அம்சம்.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி நிறுவனம் தனித்துவமான டிசைன் கொண்ட செக்யூரிட்டி கேமரா மாடல்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களின் செக்யூரிட்டி கேமராக்களை விட சியோமி நிறுவனத்தின் செக்யூரிட்டி கேமரா மாடல்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 (Xiaomi Smart Camera C100) எனும் செக்யூரிட்டி கேமராவை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
அதாவது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடல் ஆனது தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த கேமரா இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சியோமி கேமராவின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 அம்சங்கள் (Xiaomi Smart Camera C100 specifications): இந்த புதிய சியோமி கேமரா 2304×1296 ரெசல்யூஷனில் வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது. அதுவும் இந்த சாதனத்தில் 3 மெகாபிக்சல் சென்சார் வசதியும் உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த செக்யூரிட்டி கேமரா தெளிவான வீடியோக்களை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
128° வைடு ஆங்கிள் லென்ஸ் (128° wide-angle lens) மற்றும் எப்/1.6 அபெர்ச்சர் ( f/1.6 aperture) ஆதரவும் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடலில் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் தெளிவான வீடியோக்களை பதிவு செய்ய 940என்எம் இன்பிராரெட் எல்இடி (940nm infrared LED) அம்சமும் இந்த புதிய கேமராவில் உள்ளது.
குறிப்பாக புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடலில் மேம்பட்ட AI அம்சங்கள் உள்ளன. அதன்படி இந்த கேமராவில் உள்ள AI அம்சம் உங்கள் வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது.
சியோமி ஹோம் ஆப் (Xiaomi Home app) மூலம் குரல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. எனவே சியோமி ஹோம் ஆப் மூலம் இந்த கேமராவுக்கு அருகில் உள்ளவர்களை எளிமையாகத் தொடர்பு கொள்ளலாம் என நிறுவனம் கூறியுள்ளது. தெளிவான ஆடியோவிற்காக அக்குஸ்டிக் எக்கோ கேன்சலேஷன் (Acoustic Echo Cancellation) மற்றும் Noise Suppression போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் பயன்படுத்தப்படுகிறது.
அதுவும் ஆண்ட்ராய்டு 8.0 மற்றும் ஐஒஎஸ் 12.0 ஆகிய பதிப்புகள் முதல் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைஃபை 6, புளூடூத் 5.2 ஆகிய கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த செக்யூரிட்டி கேமராவில் உள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) மற்றும் அமேசான் அலெக்சா (Amazon Alexa) ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி கேமரா.
மேலும் சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடலில் 256ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறியுள்ளது. இந்த கேமராவின் எடை 170 கிராம் ஆகும். ஐரோப்பாவில் இந்த புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி100 மாடலின் விலை £24.99 (இந்திய மதிப்பில் ரூ.2,952) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








