Home
Camera

Xiaomi அறிமுகம் செய்த புதிய செக்யூரிட்டி கேமரா.. AI அம்சம்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் செக்யூரிட்டி கேமராக்களுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் செக்யூரிட்டி கேமரா மாடல்களை அறிமுகம் செய்கிறது சியோமி. எனவே தான் இந்நிறுவனத்தின் செக்யூரிட்டி கேமராக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் கேமரா 4சி 3.5கே (Xiaomi Smart Camera 4C 3.5K) எனும் புதிய செக்யூரிட்டி கேமரா மாடலை அறிமுகம் செய்துள்ளது சியோமி.

குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்கள் மற்றும் தரமான சிப் உடன் சியோமி ஸ்மார்ட் கேமரா 4சி 3.5கே மாடல் தற்போது வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சியோமி செக்யூரிட்டி கேமரா மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Xiaomi அறிமுகம் செய்த புதிய செக்யூரிட்டி கேமரா.. என்ன விலை?

சியோமி ஸ்மார்ட் கேமரா 4சி 3.5கே அம்சங்கள் (Xiaomi Smart Camera 4C specifications): 1/2.45-இன்ச் இமேஜ் சென்சார் பயன்படுத்தி 3200 × 1800 பிக்சல்களில் வீடியோ பதிவு செய்யும் 6 மெகாபிக்சல் கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த கேமராவில் உள்ள ஏஐ அம்சங்கள் குறைந்த வெளிச்சத்திலும் கூட சிறந்த பிரைட்னஸ் வசதியுடன் துல்லியமான வீடியோக்களை பதிவு செய்ய உதவுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

OFDMA தொழில்நுட்பத்துடன் கூடிய டூயல்-பேண்ட் வைஃபை 6 ஆதரவுடன் சியோமி ஸ்மார்ட் கேமரா 4சி 3.5கே மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் வைஃபை 4 உடன் ஒப்பிடும்போது 60% வரை ட்ரான்ஸ்பர் ஸ்பீட் வழங்கும். அதேபோல் இது மொபைல் சாதனங்களில் மிகவும் நிலையான இணைப்பையும் மென்மையான நேரடி காட்சியையும் வழங்குகிறது.

இந்த புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா 4சி 3.5கே மாடல் ஆனது 1T AI சிப் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இதுதவிர மனிதர்கள் மற்றும் செல்லப்பிராணிகளைக் கண்டறிவதற்கான வேகம் மற்றும் மூவ்மெண்ட்ஸ் டிராக்கிங்(movement tracking), துல்லியத்தையும் மேம்படுத்துகிறது இந்த சிப்.

புதிய சியோமி கேமராவின் பாதுகாப்பு அம்சங்களில் EAL 5+ சான்றிதழ் கொண்ட MJA1 பாதுகாப்பு சிப், கிளவுட் டிரான்ஸ்மிஷன் என்க்ரிப்ஷன் மற்றும் ஒரு பிஸிக்கல் லென்ஸ் கவர் (physical lens cover) போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த செக்யூரிட்டி கேமராவின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

இந்த கேமராவில் உள்ள AI அம்சம் உங்கள் வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது. இதுதவிர பல மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது. மேலும் 940 nm இன்பிராரெட் லைட் (infrared light) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி கேமரா. எனவே இரவு நேரங்களிலும் துல்லியமான வீடியோக்களை பதிவு
செய்ய முடியும்.

Xiaomi அறிமுகம் செய்த புதிய செக்யூரிட்டி கேமரா.. என்ன விலை?

360 டிகிரி ஹரிசான்டல் வியூவிங் ஆங்கிள் (360-degree horizontal viewing angle), 116 டிகிரி வெர்ட்டிக்கல் வியூவிங் ஆங்கிள் ஆதரவை வழங்குகிறது புதிய சியோமி செக்யூரிட்டி கேமரா. மேலும் 256ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் ஆதரவை வழங்குகிறது இந்த கேமரா. இதுதவிர என்எஸ்ஏ (NSA) ஸ்டோரேஜ் விருப்பமும் உள்ளது. மேலும் பிற சியோமி சாதனங்களுடன் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா 4சி 3.5கே மாடலை எளிமையாக இணைக்க முடியும்.

ஆனால் சியோமி ஸ்மார்ட் கேமரா 4சி 3.5கே மாடல் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த கேமரா இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சியோமி ஸ்மார்ட் கேமரா 4சி 3.5கே மாடலின் விலை CNY 199 (இந்திய மதிப்பில் ரூ.2,424) ஆக உள்ளது.

photo credit: notebookcheck, donanimhaber

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Camera 4C launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X