Home
Camera

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. டூயல் கேமரா.. கம்மி விலை.. அறிமுகமானது Xiaomi செக்யூரிட்டி கேமரா..

செக்யூரிட்டி கேமராக்கள் வீடுகளில் இருப்பதால் தான் திருட்டு பயம் குறைந்துள்ளது. குறிப்பாக இப்போது பல முன்னணி நிறுவனங்கள் அதிநவீன செக்யூரிட்டி கேமராக்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில் சியோமி நிறுவனம் தற்போது புதிய செக்யூரிட்டி கேமரா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது சியோமி நிறுவனம் தற்போது சியோமி அவுட்டோர் கேமரா சிடபிள்யூ500 (Xiaomi Outdoor Camera CW500) எனும் கேமராவைத் தான் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது டூயல் கேமரா மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த கேமராவின் வடிவமைப்புகூட மிகவும் அருமையாக உள்ளது.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. அறிமுகமானது சியோமி செக்யூரிட்டி கேமரா..

சியோமி அவுட்டோர் கேமரா சிடபிள்யூ500 அம்சங்கள் (Xiaomi Outdoor Camera CW500 specifications): அதாவது இந்த சியோமி அவுட்டோர் கேமரா சிடபிள்யூ500 மாடலில் உள்ள இரண்டு கேமராக்களில் 4 மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் சியோமி அவுட்டோர் கேமரா சிடபிள்யூ500 மாடலில் F/2.8 அபெக்சர் (Aperture) மற்றும் 2.5கே ரெசல்யூஷன் ஆதவுடன் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் இந்த கேமராக்கள் ஒவ்வொன்றிலும் 2 ஒயிட் லேம்ப் (white lamps) மற்றும் 2 இன்பிராரெட் நைட் வெர்ஷன் சென்சார் (infrared night vision sensors) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமராவால் இரவில் மனித உருவங்களைக் கண்டறிந்து அடையாளம் காண முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. IP66 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த சியோமி அவுட்டோர் கேமரா சிடபிள்யூ500 மாடல். சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சியோமி கேமரா வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) மூலம் இந்த சியோமி அவுட்டோர் கேமரா சிடபிள்யூ500 மாடல் இயங்குகிறது. அதேசமயம் MIJIA ஆப் மூலம் இந்த புதிய ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமராவை கண்ட்ரோல் செய்ய முடியும். குறிப்பாக இந்த MIJIA ஆப் மூலம் பயனர்கள் செக்யூரிட்டி கேமராவின் அலெர்ட்ஸ் (alerts) பெறமுடியும்.

குறிப்பாக சியோமி அவுட்டோர் கேமரா சிடபிள்யூ500 மாடல் வீடியோக்களை பதிவு 2.4GHz+5GHz டூயல்-பேண்ட் வைஃபை 6 கனெக்சன் மூலம் உங்களுக்கு அனுப்பும் திறன் கொண்டது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமராவை டேப்லெட்டுகள், டிவிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கலாம் என நிறுவனம் கூறியுள்ளது.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. அறிமுகமானது சியோமி செக்யூரிட்டி கேமரா..

தற்போது சியோமி அவுட்டோர் கேமரா சிடபிள்யூ500 மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமரா இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சியோமி அவுட்டோர் கேமரா சிடபிள்யூ500 மாடலின் விலை 329 Yuan (இந்திய மதிப்பில் ரூ.3,874)-ஆக உள்ளது. மார்ச் 20 முதல் இந்த கேமரா சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல் சியோமி நிறுவனம் எப்போது தனித்துவமான சாதனங்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Outdoor Camera CW500 Launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X