வாங்குனா இந்த Xiaomi செக்யூரிட்டி கேமரா வாங்கனும்.. 256ஜிபி மெமரி.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?
வீடுகளில் செக்யூரிட்டி கேமராக்கள் இருப்பதால் தான் திருட்டு பயம் குறைந்துள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அல்லது பொருளை கண்காணிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் பயன்படுகிறது இந்த செக்யூரிட்டி கேமராக்கள். எனவே தான் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு செக்யூரிட்டி கேமராக்களை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்தவகையில் தற்போது சியோமி நிறுவனம் அவுட்டோர் கேமரா 4 டூயல்-கேம் எடிஷன் (Outdoor Camera 4 Dual-Cam Edition) எனும் செக்யூரிட்டி கேமராவை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த புதிய செக்யூரிட்டி கேமராவின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி அவுட்டோர் கேமரா 4 டூயல்-கேம் எடிஷன் அம்சங்கள் (Xiaomi Outdoor Camera 4 Dual Cam Edition specifications): இரண்டு 5 மெகாபிக்சல் புரொஃபஷனல்-கிரேடு சென்சார்கள் (two 5-megapixel professional-grade sensors) உடன் இந்த புதிய சியோமி அவுட்டோர் கேமரா 4 டூயல்-கேம் எடிஷன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 3கே ரெசல்யூஷன் வீடியோ (3K resolution video), 2880×1620 பிக்சல்ஸ் ஆதரவுகள் இந்த கேமராவில் உள்ளன.
குறிப்பாக f/1.6 லார்ஜ் அபெர்சர் கொண்ட லென்ஸ் இந்த கேமராவில் இருக்கிறது. அதுவும் இந்த கேமரா சிறந்த பிரைட்னஸ் வசதியுடன் தெளிவான வீடியோக்களை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அல்ட்ரா வைடு கவரேஜ் (wide-angle coverage) தரும் 6மிமீ டெலிஃபோட்டோ லென்ஸ் வசதியும் இதில் உள்ளது.
இந்த செக்யூரிட்டி கேமராக்களில் ஏஐ அம்சங்கள் இருக்கின்றன. அதேபோல் ஒரு நபரையோ அல்லது வாகனத்தையோ அடையாளம் கானும் PTZ லென்ஸ் இந்த கேமராவில் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் தெளிவான வீடியோக்களை பதிவும் செய்யும் டூயல் ஒயிட் எல்இடி (dual white LED) மற்றும் இன்பிராரெட் லைட்ஸ் (infrared lights) ஆதரவும் உள்ளது. இது குறைந்த வெளிச்சத்தில் கூட மனித அசைவைக் கண்டறியும் மற்றும் லைட்டிங் சிஸ்டம் தானாகவே செயல்படும் என்று சியோமி நிறுவனம் கூறுகிறது.
IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் சியோமி அவுட்டோர் கேமரா 4 டூயல்-கேம் எடிஷன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதில் AI அம்சம் உங்கள் வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது.
சியோமி ஹோம் ஆப் (Xiaomi Home app) மூலம் இந்த சியோமி அவுட்டோர் கேமரா 4 டூயல்-கேம் எடிஷன் மாடலை இயக்க முடியும். டூயல் பேண்ட் வைஃபை 6, புளூடூத் 5.0 உள்ளிட் கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சியோமி செக்யூரிட்டி கேமராவில் உள்ளது. இன்-பில்ட் ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன் உள்ளிட்ட பல வசதிகள் இந்த சியோமி கேமராவில் உள்ளது.
வீடியோ ஸ்டோரேஜ் ஆதரவுக்கு என்று 256ஜிபி வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டுகளை பயன்படுத்தலாம். இதுதவிர Xiaomi Cloud சந்தாவும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கேமரா 30°C முதல் 60°C வரையிலான தீவிர வெப்பநிலையில் இயங்கும்.
ஆனால் சியோமி அவுட்டோர் கேமரா 4 டூயல்-கேம் எடிஷன் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த கேமரா உலக சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த புதிய செக்யூரிட்டி கேமராவின் விலை 299 yuan (இந்திய மதிப்பில் ரூ.3,534) ஆகும். வரும் ஜூன் 3 ஆம் தேதி இந்த கேமரா சீனாவில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








