வெறும் ரூ.3,204 போதும்.. டூயல் லென்ஸ்.. AI அம்சம்.. விற்பனைக்கு வந்த Xiaomi கேமரா.. எந்த மாடல்?
சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சியோமி சி500 டூயல் லென்ஸ் ஸ்மார்ட் கேமரா ( Xiaomi C500 dual-lens smart camera) மற்றும் சியோமி சி300 டூயல் லென்ஸ் ஸ்மார்ட் கேமரா (Xiaomi C300 dual-lens smart camera) ஆகிய இரண்டும் தற்போது தான் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இரண்டு கேமராக்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளன. இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி கேமரா சி300 டூயல் லென்ஸ் ஸ்மார்ட் கேமரா அம்சங்கள் (Xiaomi C300 dual lens smart camera Specifications): டூயல்-லெனஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த கேமரா. எனவே ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வீடியோ பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இருட்டான இடங்களில் கூட தெளிவாகப் படம்பிடிக்கும் திறன் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி கேமரா.

மேலே குறிப்பிட்டபடி இதில் டூயல் லென்ஸ் இடம்பெற்றுள்ளன, அதில் ஒவ்வொன்றும் 3 மெகாபிக்சல் அளவைக் கொண்டுள்ளன. அதுவும் இந்த கேமரா 2304 x 1296 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன. குறிப்பாக 6மிமீ பான்-டில்ட் டெலிஃபோட்டோ லென்ஸ் (6mm pan-tilt telephoto lens) மற்றும் 2.88மிமீ ஷார்ட்-ஃபோகஸ் ஃபிக்ஸட் லென்ஸ் (2.8mm short-focus fixed lens) என இரண்டு கேமராக்களும் இதில் இணைந்துள்ளன.
இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி300 ஆனது AI ஹியூமன் ரெகக்னிஷன் அம்சத்துடன் வருகிறது. இது உங்கள் வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
940nm இன்ஃப்ராரெட் ஃபில் லைட்ஸ் (940nm infrared fill lights), 360 டிகிரி ஹரிசான்டல் வியூவிங் ஆங்கிள் (360-degree horizontal viewing angle), 88 டிகிரி வெர்ட்டிக்கல் வியூவிங் ஆங்கிள்எனப் பல்வேறு சிறப்பான அம்சங்கள் கொண்டுள்ளது இந்த சியோமி சி300 டூயல் லென்ஸ் கேமரா மாடல்.
சியோமி சி500 டூயல் லென்ஸ் ஸ்மார்ட் கேமரா அம்சங்கள் (Xiaomi C500 dual lens smart camera specifications): இதிலும் இரண்டு லென்ஸ்கள் உள்ளன. இதில் ஒவ்வொன்றும் 3 மெகாபிக்சல் அளவைக் கொண்டுள்ளன. அதேபோல் இந்த கேமரா ஆனது F/2.8 அபெக்சர் (Aperture) மற்றும் 2.5கே ரெசல்யூஷன் ஆதரவுடன் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
IP66 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா. மேலும் இந்த கேமரா ஒவ்வொன்றிலும் 2 ஒயிட் லேம்ப் (white lamps) மற்றும் 2 இன்பிராரெட் நைட் வெர்ஷன் சென்சார் (infrared night vision sensors) உள்ளன.

சியோமி கேமரா சி300 டூயல் லென்ஸ் ஸ்மார்ட் கேமரா மற்றும் சியோமி சி500 டூயல் லென்ஸ் ஸ்மார்ட் கேமரா ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) மூலம் இயங்குகிறது. அதேபோல் இரண்டு கேமராக்களும் தற்போது சீனாவில் தான் அறிமுகம் செய்யப்பட்ட விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. விரைவில் இந்த கேமராக்கள் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
சியோமி கேமரா சி300 டூயல் லென்ஸ் ஸ்மார்ட் கேமரா மற்றும் சியோமி சி500 டூயல் லென்ஸ் ஸ்மார்ட் கேமரா மாடல்கள் சீனாவில் JD.com இல் வாங்குவதற்குக் கிடைக்கிறது. சியோமி கேமரா சி300 மாடலின் விலை 279 yuan (இந்திய மதிப்பில் ரூ.3,204)-ஆக உள்ளது. பின்பு சியோமி சி500 மாடலின் விலை 329 yuan (இந்திய மதிப்பில் ரூ.3,778)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








