உலகின் மிகச் சிறிய கேமரா!

Posted By: Karthikeyan
உலகின் மிகச் சிறிய கேமரா!

புதிய புதிய மின்னனு சாதனங்களைக் களமிறக்கும் பாயின்ட் க்ரே நிறுவனம் சமீபத்தில் உலகின் மிகச் சிறிய யுஎஸ்பி கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இந்த கேமராவிற்கு எப்எல்3-யு3-88எஸ்2சி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த சிறிய கேமரா பாயின்ட் க்ரேயின் பிலியே3 யுஎஸ்பி 3.0 கேமராக்களின் வரிசையில் வருகிறது.

இந்த புதிய கேமரா பார்ப்பதற்கு சிறியதாக மற்றும் வித்தியாசமாக இருந்தாலும் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் களமிறங்குகிறது. குறிப்பாக இந்த கேமரா சோனியின் புதிய ஐஎம்எக்ஸ்121 சென்சார் மற்றும் எக்ஸ்மோர் ஆர் மற்றும் சிஎம்ஒஎஸ் ஆர்க்கிடெக்சருடன் வருகிறது. அதன் மூலம் இந்த கேமரா மிகத் துல்லியமான படங்களை அம்சமாக எடுக்க முடியும்.

இந்த கேமராதான் உலகின் மிகச் சிறிய யுஎஸ்பி கேமரா என்று கருதப்படுகிறது. ஏனெனில் இந்த கேமராவின் மொத்த பரப்பு 29 x 29 x 30 மிமீ மட்டுமே. இந்த சிறிய கேமரா எல்லாவிதமான இமேஜ் டேட்டா பார்மட்டுகளையும் கொண்டிருக்கிறது. அதுபோல் இதில் வீடியோ டேட்டா அவுட்புட்டையும் பார்க்கலாம். அதோடு பார்சியல் இமேஜ் மோடுகள், வொயிட் பேலன்ஸ், கலர் ப்ராசஸிங், டிஜிட்டல் இன்டர்பேஸ், 5 ஜிபிட் ட்ரான்ஸ்பர் ரேட்ஸ், 32 எம்பி இமேஜ் பபர் மற்றும் 2 மெமரி சேனல்கள் என்று ஏராளமான அசம்சங்களை இந்த கேமரா வழங்குகிறது.

இந்த கேமரா 945 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,442க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த கேமராவை பாயின்ட் க்ரே ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் வாங்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot