Home
Camera

செயல்பாட்டிற்கு வந்தது உலகின் மிகப்பெரிய கடல் சுத்தகரிப்பு அமைப்பு.!

அதுமட்டுமின்றி இதில் சேகரமாகும் நெகிழி குப்பைகளுக்கு எந்த மதிப்பும் கிடையது மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்வதும் இலாபகரமானது அல்ல.

ஒவ்வொரு நாளும் நம்மால் சுற்றுச்சூழலைப் பற்றிய நல்ல செய்தியை கேட்கமுடியாது. ஆனால் அனைத்து நாட்களும் இருண்ட எதிர்காலத்தை நோக்கியுள்ள நம் சூழலைப் பற்றிய கடுமையான எச்சரிக்கைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. எனவே உண்மையிலேயே சுற்றுசூழலுக்கு ஏதேனும் நல்லது ஏற்படுகிறது எனில், அது கொண்டாடப்படவேண்டிய ஒன்று. சமீபத்தில் நடைபெறும் அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று தான், கடல் சுத்தகரிப்பு செயல்திட்டத்தின் முதல் சுத்தகரிப்பு அமைப்பை பசிபிக் பெருங்கடலில் நிறுவும் நிகழ்வு.

செயல்பாட்டிற்கு வந்தது உலகின் மிகப்பெரிய கடல் சுத்தகரிப்பு அமைப்பு.!

இந்த அமைப்பில் உள்ள 600மீட்டர் நீளமுள்ள குழாய் ஒன்று வலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வலையை பயன்படுத்தி ஓர் இடத்தில் கைப்பற்றப்படும் நெகிழி(பிளாஸ்டிக்) குப்பைகள் சேகரிக்கப்பட்டு, சிறப்பு படகுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றன.


இந்த கடல் சுத்தகரிப்பு அமைப்பு எப்படி செயல்படுகின்றது என விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.

இந்த திட்டமானது நீடித்து நிலைக்கக்கூடிய ஒன்றாக தெரியவில்லை. ஏனெனில் இது மிகவும் செலவாகும் திட்டம். அதுமட்டுமின்றி இதில் சேகரமாகும் நெகிழி குப்பைகளுக்கு எந்த மதிப்பும் கிடையது மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்வதும் இலாபகரமானது அல்ல. ஆனாலும் நீண்ட கால நோக்கில் பார்க்கையில், எண்ணெய் விலை அதிகரிக்கும் போது தூய்மையான நெகிழியின் விலை அதிகரித்து, சுத்தகரிப்பு செலவுகள் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்பாட்டிற்கு வந்தது உலகின் மிகப்பெரிய கடல் சுத்தகரிப்பு அமைப்பு.!

எதுஎப்படியிருந்தாலும், இந்த திட்டம் எவ்வளவு விலையுயர்ந்ததாக இருப்பினும், கடலை காப்பாற்றுவது என்பது நாம் உயிர்வாழ மிகமுக்கியமான ஒன்று மற்றும் இந்த கடல் சுத்தகரிப்பு திட்டம் மனிதாபிமானத்துடன் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.

Best Mobiles in India

English summary
World’s First Fully Functional Ocean Cleanup Project Is Finally Deployed: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X