Home
Camera

முதல்முறையாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிளாக்செயின் பத்திரம்.!

பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி விற்பனை செய்யும் பத்திரங்களை வெளியிடுவது.

By Siva Lingam

உலக வங்கி முதல்முறையாக டிஜிட்டல் நிதி குறித்த ஒரு தைரியமான முடிவை எடுத்துள்ளது. அதுதான் பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி விற்பனை செய்யும் பத்திரங்களை வெளியிடுவது. இது உலகவங்கியின் தைரியமான முடிவின் இன்னொரு அடி ஆகும்.

இந்த பிளாக்செயின் மூலம் உலக வங்கி ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெற விரும்புகிறது. பொதுத்துறையில் ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஈடுபடுத்துவது எதிர்காலத்திற்கான ஒரு பொற்காலம் என நிதி ஆதாரங்களின் வளர்ச்சி தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 டெக்னாலஜி

டெக்னாலஜி

இந்த டெக்னாலஜி சமீபத்தில் பிரபலமான பிட்காயின் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிட்காயின் பெரும்பாலும் நம்பகத்தன்மையின்றி சந்தேகத்தை எழுப்புவதாகவும், குற்றம் சார்ந்த நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

 ஆகஸ்ட் 20

ஆகஸ்ட் 20

ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பு வந்த இந்த பிளாக்செயின் பாண்ட் உண்மையில் உலகில் பணப்புழகத்தை ஆஸ்திரேலிய டாலரில் அதிகப்படுத்துகிறது. இந்த பரிவர்த்தனையை உலகில் எந்த நாடும் குறைகூற வில்லை

வாஷிங்டனை சேர்ந்த இந்த நிறுவனத்தின் முயற்சியால் சுமார் 50 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர்கள் இதில் முதலீடு செய்யபப்ட்டிருப்பதாகவும், ஆகஸ்ட் 20க்குள் முடியும் நிதியாண்டில் இன்னும் அதிகரிக்க வாயுப்பு இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பங்கள்

தொழில்நுட்பங்கள்

1947ஆம் ஆண்டின் முதல் பத்திர பரிவர்த்தனையில் இருந்து, கண்டுபிடிப்பு மற்றும் முதலீட்டாளர் திருப்தி வளர்ச்சிக்கு மூலதனச் சந்தைகளை மேம்படுத்துவதன் மூலம் நமது வெற்றிக்கான முக்கிய குறிக்கோளாக இருந்தது" என்று உலக வங்கியின் பொருளாளர் அருண்மா ஓதே என்பவர் தெரிவித்துள்ளார்.

இன்று, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் சமமான மாற்றங்களை வழங்குகின்றன என்றும், இன்னும் அறிவூட்டல், புதிய முதலீட்டாளர் தேவைகளுக்கு பதிலளிப்பது மற்றும் சந்தைப்படுத்துவதை பலப்படுத்துவது ஆகியவை எங்களுடைய நோக்கம் என்றும் அவர் மேலும் கூறினார்.

 மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

இந்த பரிவர்த்தனை முழுக்க முழுக்க உலக வங்கியின் கண்டுபிடிப்பு என்பதும், இது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக, காமன்வெல்த் வங்கியின் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இந்த நிறுவனம் இணைந்து கொள்வதோடு இதன் மென்பொருள் திடமான, பிழைகள் இன்றி மற்றும் எந்தவித மோசமான தாக்குதலும் இன்றி செயல்படுவதாக உலக வங்கியின் கருவூல செயல்பாடுகள் மூலதன சந்தையின் மேலாளர் பால் சினத் என்பவர் கூறியுள்ளார்.

ரிஜிஸ்டர்

ரிஜிஸ்டர்

இந்த பிளாக்செயின் பத்திரத்தை பயன்படுத்துவதால் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றும் அதிமட்டுமின்றி பொதுமக்களின் பரிமாற்ற நேரத்தை வெகுவாக குறைக்கலாம் என்றும், பத்திரங்கள் மற்றும் பணம் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது இதில் முதலீடு செய்பவர்கள் குறைந்தபட்சம் ரிஜிஸ்டர் மட்டும் செய்து பிளாக்செயின் மூலம் பணத்தை ஒரு எளிய முறையில் மரிமாற்றம் செய்து கொள்ளலாம். இரண்டு வருட ஒப்பந்தத்தில் பெறப்படும் இந்த பிளாக்செயின் பத்திரம் உண்மையில் நல்ல வாய்ப்பு மட்டுமின்றி பல நிகழ்வுகளை கற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
World Bank to issue world's first blockchain bond: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X