Home
Camera

நிக்கான் கேமராவுக்கு புதிய வயர்லஸ் அடாப்படர்!

By Karthikeyan
நிக்கான் கேமராவுக்கு புதிய வயர்லஸ் அடாப்படர்!

நிக்கன் வழங்கிய நிக்கன் டி3200 கேமரா உலக அளவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த கேமராவிற்காக இப்போது நிக்கன் ஒரு புதிய வயர்லஸ் அடாப்டரை வழங்க இருக்கிறது.

டபுள்யுயு-1 என்று அழைக்கப்படும் இந்த வயர்லஸ் மொபைல் அடாப்டர் இந்த கேமராவிற்கு ஒரு தனித்துவமான வசதியை வழங்கும். அதாவது இந்த வயர்லஸ் அடாப்டர் ரிமோட் ட்ரிக்கர் செட்டப் மற்றும் வயர்லஸ் ட்ஸ்ப்ளே போன்ற வசதிகளை இந்த கேமராவிற்கு வழங்கும்.

அதோடு இந்த வயர்லஸ் அடாப்டர் மூலம் ஆன்ட்ரோய்டு போன் மற்றும் டேப்லெட்டுகளை துணை வயர்லஸ் ட்ஸ்ப்ளேகளாக பயன்படுத்த முடியும். மேலும் இந்த அடாப்டர் மூலம் போட்டோ எடுத்த பின் லேப்டாப்போடு இணைக்காமல் இந்த கேமராவின் 3 இன்ஸ் டிஸ்ப்ளேயில் மிகப் பெரிய அளவில் அந்த போட்டோக்களைப் பார்க்க முடியும்.

மேலும் இந்த புதிய அடாப்டர் மூலம் வயர்லஸ் வழியாக மொபைல் மூலம் போட்டோ எடுக்க முடியும். வைபை நெட்வொர்க்கிற்கு வெளியில் இருந்தாலும் இந்த அடாப்டர் மொபைலுக்கு வைபை இணைப்பை வழங்கும்.

அதோடு இந்த அடாப்டர் டபுள்யுஎம்எயு என்ற ஒரு புதிய அப்ளிகேசனை வழங்குகிறது. இதன் மூலம் போட்டோக்களை ரிமோட்டில் எடுக்க முடியும். அவற்றை இணையதளத்தில் பகிர முடியும். அதே நேரத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

இந்த நிக்கன் அடாப்டர் ரூ.3,500க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X