ஜனவரி 4: இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எஸ்1 ப்ரோ.!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் 2020, ஜனவரி 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன்
வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6ஜிபி/8ஜிபி ரேம்
விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசித இடம்பெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

32எம்பி செல்பீ கேமரா
இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்ப மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4500எம்ஏஎச் பேட்டரி
விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றி தௌவாக தெரியவில்லை,அப்டேட் கிடைத்தவுடன் உடனே தெரிவிக்கிறோம்.


Click it and Unblock the Notifications