அமெரிக்க ராணுவத்தில் 1.8 ஜிபி கேமிரா கொண்ட ஹெலிகாப்டர் ட்ரோன்கள்.!

இந்த ட்ரோன்கள் ஆளில்லா உபகரணமாக ராணுவத்திற்கு உதவுகிறது என்பதை ராணுவ தலையமையகம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

|

அமெரிக்க ராணுவத்தில் தற்போது 1.8ஜிபி தன்மையுள்ள கலர் கேமிராக்கள் இணைக்கப்பட ஹெலிகாப்டர் ட்ரோன்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் மூலம் தரையில் இருக்கும் சில முக்கிய நிகழ்வுகளை இந்த டெக்னாலஜி கலந்து ட்ரோன்கள் மூலம் அறிந்து கொள்வதே இதன் பயன் ஆகும். கட்ந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்த வகை டெக்னாலஜி ட்ரோன்கள் மூன்று முறை அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் 1.8 ஜிபி கேமிரா கொண்ட ஹெலிகாப்டர் ட்ரோன்கள்.!

பல்வேறு விஷயங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று ஆண்டு முழுவதும் நமக்கு முக்கிய தகவல்களை கொடுக்கும் இயந்திரங்களில் ஒன்று இந்த ட்ரொன் என்றும் அமெரிக்க ராணுவத்தில் ஆளில்லா டெக்னாலஜியை பயன்படுத்தும் துறையில் லெப்டினட் காலானெல் ஆக உள்ள மாத்யூ மன்ஸ்டர் என்பவர் தெரிவித்துள்ளார்.

பெரிய கண்கள்
இந்த A160 என்று அழைக்கப்படும் டெக்னாலஜி பறவை பறப்பதற்கு ரன்வே தேவையில்லை. இது செங்குத்தாக உடனே கிளம்பும் தன்மை உடையது. இந்த ட்ரோன்கள் ஆளில்லா உபகரணமாக ராணுவத்திற்கு உதவுகிறது என்பதை ராணுவ தலையமையகம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அரிசோனாவில் சோதனை விமானங்கள் இயக்கப்படும். இந்த ட்ரோன்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில், தன்னாட்சி நிகழ்நேர மைதானம் மர்றும் கண்காணிப்பு- இமேஜிங் சிஸ்டத்திற்காக முதலில் பயன்படுத்தப்பட்டது.

இதில் உள்ள ஆர்கஸ்-ஐ.எஸ்ஸின் தன்மையானது ஆர்கஸ் பானோப்ட்டை நினைவுகூறும் வகையிலும் தொன்மையான கிரேக்கர்களின் நூறு கண்களுக்கு நிகரானதும் கூட. இந்த டெக்னாலஜி ட்ரோனில் 1.8 ஜிபி கேமிரா உள்ளது. மேலும் இதில் பெரிய அளவிலான வீடியோ சென்சாரும் உள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் 1.8 ஜிபி கேமிரா கொண்ட ஹெலிகாப்டர் ட்ரோன்கள்.!

ஒரு மொபைல் போனில் உள்ள 2எம்பி கேமிராவை போன்ரு 900 மடங்கு பெரிய பிக்சலை கொண்டது இந்த ட்ரோன். மேலும் ஒரு வினாடிக்கு 10 பிரேம் கொண்ட வீடியோவை இதில் நேரடியாக பார்க்கலாம். மேலும் 20 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து சுமார் 65 மைல்கள் பரப்பளவில் உள்ள அனைத்து விஷயங்களையும் அதாவது ஓடும் வண்டிகள் முதல் மக்கள் வரை அனைத்தையும் இந்த கேமிரா மூலம் நேரடியாக பார்க்கலாம்.

அதேபோல் கீழே இருக்கும் ஆப்பரேட்டர்கள் மூலம் இதனை சுமார் 65 பிரிவுகளாக பிரித்து வெவ்வேறு இடங்களில் உள்ள வாகனங்கள், மக்கள் மற்றும் பிற பொருட்களையும் பல்வேறு திசைகளில் சென்று கொண்டிருப்பதையும் தெளிவாக பார்க்க முடியும்.

ஒரே நேரத்தில் ஒரு பெரிய கூட்டமே வெளியே வரும் நிஅலி இருந்தாலும் அவை ஒவ்வொன்றையும் ஒன்று, இரண்டு, மூன்று , நான்கு என்ற எண்ணிக்கையில் அதனை பிரிவுபடுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று இந்த டெக்லாலஜியை அறிமுகம் செய்து வைத்த பிரைன் லெனிஞர் என்பவர் தெரிவித்துள்ளார். அதாவது இந்த ட்ரோனை ஆப்பரேட் செய்பவர் அனைவையும் பின் தொடரலாம். இந்த டெக்னாலஜி பறவையில் ஒரு புதிய வகையான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
ஒரு வருட சோதனைக்கு பின்னர் எதிரி நாடுகளில் நிகழ்த்த வேண்டிய பல்வேறு செயல்களுக்கு இந்த ட்ரோன்களை பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.


இரவு நேர சென்சார்கள்
அமெரிக்காவில் உள்ள DARPA என்ற ராணுவ அமைப்புக், பிரிட்டனை சேர்ந்த ராணுவ காண்ட்ராக்டர் நிறுவனமான BAE சிஸ்டமும் இணைந்து இந்த ட்ரோன்களில் அட்வான்ஸ் ரகம் ஒன்றை தயாரித்துள்ளனர். இதில் என்ன விசேஷம் என்றால் இதில் இரவு நேர சென்சார்கள் உண்டு. இரவு நேரத்திலும் தெளிவாக அனைத்தையும் பார்க்கும் வகைஇல் இதில் இன்ஃப்ரே ரெட் மூலம் செயல்படும் வகையில் உள்ளது

அமெரிக்க ராணுவத்தில் 1.8 ஜிபி கேமிரா கொண்ட ஹெலிகாப்டர் ட்ரோன்கள்.!

மேலும் இந்த ட்ரோன்கள் ஒரே நேரத்தில் 130 பிரிவுகளாக பிரிந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த சிஸ்டம் பிளைட் முதமுதலில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சோதனை செய்யப்பட்டது. விமானத்தை போன்ற இறகுகளுடனும் தேவையான ஆயுதங்கலையும் இந்த ட்ரோன் எடுத்து சென்று சோதனை செய்யப்பட்டதாக பிளைட் குளோபல் என்ற இணையதளம் கூறியுள்ளது.

ஆளில்லாமல் இயங்கும் தன்மையுடைய இந்த ட்ரோன்கள் பெரும் பயன்களை ராணுவத்திற்கு தந்து கொண்டிருந்தாலும் ஒருசில சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் பார்டரில் 24 குழந்தைகள் மரணத்திற்கு இதுபோன்ற ஒரு ட்ரோன் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இரான் நாடும் இந்த வகை ட்ரோன்களை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
US Army unveils 1.8 gigapixel camera helicopter drone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X