சிசிடிவி கேமராவில் செயற்கை நுண்ணறிவை புகுத்திய ஸ்மார்ட்விஷன் நிறுவனம்.!

  கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான சிசிடிவி கேமராக்களில் உள்ள பிரச்சனையே அவை 'ஸ்மார்ட்' ஆக இல்லை என்பது தான். இதன் மூலம் வீடியோக்களை பதிவு செய்யவும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரலையில் பார்ப்பதற்கும், விசாரணை நடத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் என பல உபயோகங்கள் உள்ளன. ஆனால் இந்த ஸ்டார்ட்அப் சிசிடிவி கேமராக்களை முன்னெச்சரிக்கை உள்ளவையாக மாற்றுகின்றன.

  பெங்களூரை தலைமையிடமாக கொண்ட அன்கேனி விஷன்(uncanny vision) நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் லேர்னிங் அல்காரிதம் பயன்படுத்தி கண்காணிப்பு கேமராக்கள் பார்த்து புரிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்ட் அப் தயாரிப்பான "அன்கேனி சர்வைலன்ஸ்" என்ற கண்காணிப்பு கேமராக்கள், அதில் பார்க்கும் மனிதர்கள், வாகனங்கள் மற்றும் பொருட்களை கண்டுபிடித்து , ஒரு சில காரணிகளை அடிப்படையாக கொண்டு புரிந்துகொள்கின்றன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  எச்சரிக்கை

  மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ அல்காரிதம் மற்றும் விஷன் சாப்ட்வேர் உதவியுடன் மதிப்பீடு செய்து முக்கிய தகவல்கள் மற்றும் எச்சரிக்கை மட்டுமே அனுப்பப்படும்.SoC வசதியுள்ள IoT கருவிகளில் விஷன் மென்பொருளின் மூலம் ஸ்மார்ட்விஷன் வசதி ஏற்படுத்தப்படுகிறது என்கிறார் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நவநீதன்.

  இதை எளிதாத புரிந்துகொள்ள வேண்டுமானால், எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஏ.டி.ம் சென்றால் பணம் எடுக்க குறிப்பிட்ட செயல்பாடுகள் தான் செய்வீர்கள். அதை தவிர்த்து இயந்திரத்தை திறக்க முயல்வது விசித்திரமான ஒன்று என்பதால் உடனடியாக அன்கேனி சர்வைலன்ஸ் கேமரா எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்லும்.

  கேனி எட்ஜ் டிடெக்சன்

  இதைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், அன்கேனி என்ற வார்த்தைக்கு, கற்பனைக்கு எட்டாதது, விவரிக்க இயலாதது என்ற பொருள் உள்ளது. மேலும் இதில் பயன்படுத்தப்படும் அல்காரிதம் பாரம்பரிய 'கேனி எட்ஜ் டிடெக்சன்' என்பதாலும், பாரம்பரிய கம்ப்யூட்டர் விஷனை காட்டிலும் டீப் லேர்னிங் மற்றும் ஏ.ஐ தொழில்நுட்பங்கள் உள்ளதாலும் இதை 'அன்கேனி' என அழைக்கிறோம் என்கிறார் நவநீதன்.

  பெங்களூர் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் விஷன்

  பெங்களூர் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பத்தில் பணியாற்றிய ரஞ்சித்தின் மூளையில் பிறந்த குழந்தை தான் அன்கேன் விஷன். இந்த தொழில்நுட்பத்தை ஐ.ஓ.டி கருவிகளில் பயன்படுத்தும் வகையில் ஒரு நிறுவனத்தை துவங்க விரும்பிய ரஞ்சித் 2001 முதல் 2012 பணியாற்றிய டெக்சாஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி, 2013ல் அன்கேனி விஷன் -ஐ துவங்கினார் என்கிறார் நவநீதன்.

  அதே நேரம் நவநீதன், இமேஜ் ப்ராசஸிங் மற்றும் விஷன் கருவியான Zynq SoC தொழில்நுட்பத்தில் , அமெரிக்காவில் உள்ள Xilinx நிறுவனத்தில் 2007 முதல் 2012 வரை பணியாற்றியவர். இவரின் இந்த சிப் உலகமுழுக்க உள்ள பல்வேறு நிறுவனங்களின் இமேஜ் ப்ராசஸிங் செயலிகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த கருவியை 1000 மேற்பட்ட பொறியாளர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ள இவர், 2012ல் பணியை துறந்து இந்தியா திரும்பினார்.

  அன்கேனி சொல்யூசன்

  ரஞ்சித் மற்றும் அவர்களின் குழு 2013 பெங்களூர் தொழில்நுட்ப மாநாட்டில் இந்த கருவியை காட்சிப்படுத்தும் போது நவநீதன் அவர்களை சந்தித்து இணைந்து செயல்பட முடிவெடுத்தனர்.

  ஸ்மார்ட் சிட்டி /சேப் சிட்டி ப்ராஜெட்டுகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அன்கேனி விஷன் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்காற்றவுள்ளன. ஆட்டோமேடிக் டிராபிக் சிஸ்டம், டிராபிக் வயலேசன் டிடெக்சன், ஏடிம் செக்யூரிட்டி, உமன் சேப்டி போன்ற திட்டங்களுக்காக ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் இந்த கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதே செயற்கை நுண்ணறிவு விஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களான SenseTime, Face++ போல பல தொடங்கப்பட்டுள்ளன என்கிறார் நவநீதன்.

  ஜப்பான்

  ஜப்பானில் உள்ள அன்கேனி நிறுவனத்தின் கிளை மூலம், அந்நாட்டில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி வளர்ந்து வருகிறது. முக்கிய 500 நிறுவனங்களில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஜப்பான் , அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ளனர்.

  5 பணியாளர்கள் கொண்ட சிறு குழுவாக துவங்கப்பட்ட இந்நிறுவனம் இரண்டே வருடத்தில் 35 பணியாளர்களுடன் உள்ளது. வரும் நாட்களில் மேலும் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
  செயற்கை நுண்ணறிவு

  செயற்கை நுண்ணறிவு

  செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் லேர்னிங் அடிப்படையாக கொண்ட இது புதிய தொழில்நுட்பம் என்பதால், வாடிக்கையாளர்கள் துவக்கத்தில் சற்று புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர். எனவே பல்வேறு கட்ட டொமோ , பரிசோதனை மற்றும் விளக்க செயல்பாடுகளுக்கு பின்னரே இது எவ்வளவு உதவிகரமாக உள்ளது என்பதை அறிகின்றனர். இப்போது இந்த தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் சாதித்துவிட்டோம். சவாலான விசயம் என்னவென்றால் விரிவாக்கம் மற்றும் முதலீட்டு திரட்டிய பின் வளர்ச்சி என்பது தான் என்கிறார் நவநீதன்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  This startup AI-powers CCTV surveillance cameras to understand what it sees ; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more