வெட்டிங் போட்டோ ஷூட் என்கிற பெயரில் பல ஆயிரங்களை வீணடிக்கும் மக்களுக்கு இதுவொரு பாடம்.!

புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள யாருக்கு தான் பிடிக்கா

|

புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள யாருக்கு தான் பிடிக்காது. அதிலும், பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த ஆடைகளை அணிந்துகொண்டு, ஒரு கல்யாணத்திற்குள் ராஜநடை போட்டுகொண்டு செல்லும் போது, யாராவது நம்மையொரு புகைப்படம் எடுக்கும் போது.. அடடா.. அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சிவப்பு கம்பளத்தில் பேஷன் வால்க் செல்லும் மாடல்களை போல நாம் உணருவோம். அல்லவா.?

அப்படியானதொரு தருணத்தில், ஒரு ப்ரொபெஷனல் டிஎஸ்எல்ஆர் கேமரா கொண்டு புகைப்படம் எடுக்கப்படாமல், ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு புகைப்படம் எடுக்கப்பட்டால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்.?

என்னது.? ஸ்மார்ட்போன் கேமராவை வைத்து கல்யாண போட்டோ ஷூட்டா.? சும்மா காமெடி பண்ணாதீங்கப்பா.. அதிகபட்சம் 30, 40 செல்பீக்கள் வேண்டுமானால் எடுக்கலாம். ஒரு முழு வெட்டிங் போட்டோ ஷூட் எல்லாம் எடுக்க சாத்தியமே இல்லை" என்பது தான் உங்கள் பதில் என்றால்.. ஆச்சரியப்பட தயாராகி கொள்ளுங்கள்.!

மிகவும் தாமதகாவே சென்றுள்ளார்.!

மிகவும் தாமதகாவே சென்றுள்ளார்.!

பொதுவாக நமது நெருங்கிய நண்பர்கள், நமது வீடுகளில் நடக்கும் கல்யாணத்தின் கடைசி நேரத்தில் வர மாட்டார்கள். ஆனால், தேவேஷ் ஷர்மாவிற்கு அப்படியொரு சூழ்நிலை உருவானது. கோவாவில் நடக்கும் தனது நண்பரின் திருமண விழாவின் கடைசி நிமிடத்தையாவது பார்த்து விட முடியுமா என்கிற நிலைப்பாட்டில், மிகவும் தாமதகாவே சென்றுள்ளார். இதில் மற்றொரு கொடுமை என்னவெனில், கல்யாண போட்டோ ஷூட்டை கவர் செய்யும் பொறுப்பும் இவருக்கு தான்.

சோதித்துப் பார்க்கும் நேரம் வந்தது.!

சோதித்துப் பார்க்கும் நேரம் வந்தது.!

அடித்து பிடித்து கல்யாணத்திற்கு ஓடிவந்த தேவேஷ் ஷர்மாவின் கைகளில் இருந்தது, ஒரு கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மட்டும் தான். கோவாவிற்கு செல்வதற்கு முன்பே அதை அவர் வாங்கிவிட்டார். மேலும் அந்த ஸ்மார்ட்போனின் அற்புதமான கேமரா திறன்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார். அதை எல்லாம் சோதித்துப் பார்க்கும் நேரம் வந்தது.

தேவையானது எல்லா இடத்திலும்.!

தேவையானது எல்லா இடத்திலும்.!

கொஞ்சம் கூட தயக்கமின்றி, பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனை எடுத்து, கல்யாண கோலாகலங்களை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். புகைப்படங்கள் எடுக்க எடுக்க, ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவின் தேவையானது எல்லா இடத்திலும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை, தேவேஷ் ஷர்மா உணரத்தொடங்கினார். எனவே அவர் முழு திருமண விழாவையும் ஸ்மார்ட்போன் கொண்டே ஷூட் செய்ய முடிவு செய்தார்.

இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.!

இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.!

"என் நண்பர்களில் பலர் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதைப் பற்றி எனக்கு அறிவுறுத்தினர். ஏற்கனவே நன் நெக்சஸ் 5 ஸ்மார்ட்போனை பயன்படுத்திய காரணத்தினால், பிக்சல் 2 எக்ஸ்எல்-க்கு விரைவாக மாறினேன். பிக்சல் கேமரா கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை நானே பயன்படுத்தி எடுத்த பிறகு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது" என்கிறார் ஷர்மா.

தேவையான மற்றும் தெளிவான தரம்.!

தேவையான மற்றும் தெளிவான தரம்.!

மேலும், "இது என் பெஸ்ட் பிரெண்ட்டின் திருமணம் என்பதால், கேமராக்கள் இல்லாமல், நாங்களே புகைப்படங்களை பதிவு செய்து கொண்ட அனுபவம் இன்னும் இனிமையானதாக உள்ளது. குறிப்பாக பிக்சல் 2 எக்ஸ்எல் கொண்டு கிளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள், தேவையான மற்றும் தெளிவான தரத்தை வெளிப்படுத்தியது. குறைந்த ஒளி நிலைமைகளில் கூட சிறப்பான புகைப்படத்தை வெளிக்கிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது" என்கிறார் ஷர்மா

Instagram Simple Tips and Tricks (TAMIL)
செலவு செய்யும் மக்களுக்கு இதுவொரு பாடம்.!

செலவு செய்யும் மக்களுக்கு இதுவொரு பாடம்.!

சுவாரசியம் என்னவெனில், திருமண விழாவை மட்டுமின்றி, தொடர்ச்சியாக அடுத்த நாளில் நிகழ்ந்த இதர சம்பிரதாயங்களை கூட, கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் கொண்டே, ஷர்மா சூட் செய்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட ஒரு முழு திருமண விழாவையும் ஸ்மார்ட்போன் கேமரா கொண்டே கவர் செய்துள்ளனர். பல ஆயிரம் (இன்னும் சொல்லப்போனால் ஒரு லட்சம் வரை ) ரூபாய்க்ளை போட்டோ ஷூட்டில் செலவு செய்யும் மக்களுக்கு இதுவொரு பாடம் என்பது வெளிப்படை.!

Best Mobiles in India

English summary
This guy shot an entire wedding ceremony on the Pixel 2 and everyone's impressed. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X