இது தொழிற்சாலை இயந்திரம் அல்ல உலகின் அதிவேகமான கேமரா.!

இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராக்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

|

இப்போது வரும் புதிய தொழில்நுட்பம் அனைத்தும் வியக்கவைக்கும் வகையில் தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும், அதன்படி ஒளியை ஸ்லோமோஷனில் படம்பிடிக்கும் திறனை கொண்ட உலகின் அதிகவேகமான கேமரா தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொழிற்சாலை இயந்திரம் அல்ல உலகின் அதிவேகமான கேமரா.!

இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராக்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர், சிலர் டிஎஸ்எல்ஆர் போன்ற கேமராவில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அதிக கவனம் செலுத்துகின்றனர், ஆனால் இப்போது வந்துள்ள இந்த புதுவகையான கேமரா அதிக செலவில் உருவாக்கப்பட்டுள்ளது, எனவே இது போன்ற கேமராக்கள் திரைப்படங்கள் எடுப்பதற்கு தான் பயன்படும்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் க்யூபெக் பல்கலைக்கழகமும் இணைந்து டி-சிபியு (T-CUP) என்ற கேமராவை உருவாக்கியுள்ளன, இந்த கேமரா மாடல் தான் உலகின் அதிவேகமான கேமரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த கேமராவில் உள்ள லென்ஸ்-ல் லேசர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, எனவே லென்ஸ் மூலம் ஒளி கடந்து செல்லும் போது என்ன நடக்கிறது என்று தெளிவாக பார்க்க முடியும்.

 10ட்ரில்லியன்

10ட்ரில்லியன்

குறிப்பாக ஒரு விநாடியில் 10ட்ரில்லியன் ப்ரேம்களை படம்பிடிக்கும் சக்தி கொண்டுள்ளது, இந்த கேமரா மாடல். மேலும் குறுக்கப்பட்ட அதிதீவிரவேக படப்பிடிப்பு (Compressed Ultrafast Photography - CUP) என்ற முறையின்அடிப்படையில் தான் இந்த கேமரா இயங்குகிறது.

 ஃபெம்டோ விநாடி ஸ்ட்ரீக் கேமரா

ஃபெம்டோ விநாடி ஸ்ட்ரீக் கேமரா

இந்த கேமராவில் இடம்பெற்றுள் ஸ்கேனர்களில் ஃபெம்டோ விநாடி ஸ்ட்ரீக் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே ஒரு
நானோ விநாடியின் மில்லியன் பகுப்புகளில் ஒன்று ஒரு ஃபெம்டோ விநாடி என்று கூறப்படுகிறது.

 மிக முக்கியமான சிறப்பம்சம்

மிக முக்கியமான சிறப்பம்சம்

இப்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த கேமராவின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் ஒளியின் வீச்சையும் மெதுவாக்கி படம்பிடிக்கும் திறன் (ஸ்லோமோஷன்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
This camera at 10 trillion fps can capture light in slow motion: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X