டிரம்ப் புகைப்படத்தை தினமும் பூஜை செய்து வரும் தெலுங்கானா விவசாயி.!

கடந்த ஆண்டு பிப்ரவர் மாதம் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஸ்ரீனிவாஸ் குஷிபோட்லா என்பவர் அமெரிக்க கப்பல் படையினர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.

|

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், புஸ்சா கிருஷ்ணனை என்பவரை பொருத்தவரை கடவுளாக உள்ளார்.

ஆம், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜங்கான் மாவட்டத்தில் கொனே என்ற கிரமத்தை சேர்ந்த 31 வயது விவசாயி புஸ்சா கிருஷ்ணன். இவர் தன்னுடைய பூஜையறையில் டிரம்பின் போட்டோவை இந்து கடவுள்களுடன் சேர்த்து வைத்து தினமும் பூஜை செய்து வருகிறார். கடவுள் படங்களுக்கு மாலை, மஞ்சள் போன்ற பொருட்களை வைத்து வழிபடுவது போல் டிரம்பையும் அவர் தினசரி வழிபட்டு ஆராத்தி எடுத்டு வருகிறார்.

டிரம்ப் புகைப்படத்தை தினமும் பூஜை செய்து வரும் தெலுங்கானா விவசாயி.!

கடந்த ஆண்டு பிப்ரவர் மாதம் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஸ்ரீனிவாஸ் குஷிபோட்லா என்பவர் அமெரிக்க கப்பல் படையினர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னரே புஸ்டா கிருஷ்ணன், டிரம்ப்பின் போட்டாவை தினமும் வழிபட்டு வருகிறார்.

சாட்ப்வேர்

சாட்ப்வேர்

சாட்ப்வேர் எஞ்சினியர் மரணம் என்னை மிகவும் பாதித்த்து. அமெரிக்க அதிபரும், அமெரிக்க மக்களும் இந்தியர்களின் அன்பு மற்றும் பாசத்தை தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே நான் இந்த பூஜையை செய்து கொண்டு வருகிறேன். என்னுடைய இந்த வழிபாடு நிச்சயம் ஒருநாள் டிரம்ப்பை சென்று அடையும் என்றும், இந்தியர்களை அவர் புரிந்து கொள்வார் என்றும் நம்புகிறேன்' என்று புஸ்சா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியர்கள் ஆன்மீகத்தின் மூலம் எதையும் வெல்லும் வல்லமை படைத்தவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஒருவரை நேரடியாக வெல்லை முடியவில்லை என்றால் நிச்சயம் அன்பு செலுத்துதல் மற்றும் வழிபடுதல் மூலம் வெல்லலாம் என்ற நம்பிக்கையில் நான் இந்த பூஜையை தினந்தோறும் செய்து கொண்டிருக்கின்றேன்' என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நடிகர்களை வழிபடுவது என்பது இந்தியர்களுக்கு புதியது அல்ல. நடிகர், நடிகைகளுக்கு கோவில் கட்டு கும்பிட்ட சம்பவங்களும் இங்கு நடந்ததுண்டு. தெலுங்கானாவின் அண்டை மாநிலமான தமிழகத்தில் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் அவர்களுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததும், அவருடைய வழிவந்த தலைவரான முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை கடவுளுக்கு சமமாம அவரது கட்சியினர் வழிபட்டார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே

மோடி

மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ராஜ்காட் நகரில் கோவில் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த கோவில் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க அகற்றப்பட்டது


ஆனால் இங்கு டிரம்ப் குறித்து புஸ்சா கிருஷ்ணனுக்கு அதிகம் தெரியாது. இதுகுறித்து அவர் கூறியபோதும், 'எனக்கு தெரியும் டிரம்ப் அவர்கள் உலகின் சக்திமிக்க மனிதர்களில் ஒருவர் என்று. அவருடைய உறுதியான மனதைரியம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒரு குத்துச்சண்டை வீரனை போல் மிகுந்த வல்லமை படைத்த மனிதராக உள்ளார். என்று கிருஷ்ணாவின் பள்ளி தோழர் ஒருவர் கூறியுள்ளார்.

டிரம்ப்

டிரம்ப்

அதேபோல் கிருஷ்ணா, டிரம்ப்பை பூஜை செய்யும் புகைப்படத்தை அவ்வப்போது தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வருபவராக கிருஷ்ண் ராஜ் என்பவர் கூறியுள்ளார்.

ஒரு சிறிய கிராமத்தில் டிரம்ப் புகைப்படத்தை வைத்து பூஜை செய்வது டிரம்ப்புக்கு எப்படி தெரிய வரும். இதுவொரு முட்டாள்தனமான காரியம் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் எனக்கு என்னுடைய செயல் மீது நம்பிக்கை இருக்கின்றது என்று கிருஷ்ணா உறுதியுடன் கூறுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய நம்பிக்கை வீணாகவில்லை. ஆம், டிரம்பிடம் இருந்து ஒரு தகவல் கடந்த 19ஆம் தேதி வந்தது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களில் கிருஷ்ணா என்னை மிகவும் கவர்ந்துவிட்ட நண்பராக தெரிகிறார். அவர் என் புகைப்படங்களை வணங்குவதன் மூலம் சக்தியை சேமிக்கும் திறனைக் கொண்டிருக்கிறார்; அவருடைஅ செய்கை எனக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. அவரை நான் வெகு விரைவில் சந்திப்பேன்' என்று கூறியுள்ளார். நான் சந்தோஷமாக இருக்கிறேன் அவருடைய வழிபாடு உண்மையானதா என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் கிருஷ்ணா என் மனதை கவர்ந்துவிட்டார். நான் அவருடைய தகவலை பார்த்து உண்மையிலேயே சந்தோஷம் அடைந்தேன். நான் இந்தியா வரும்போது இதுகுறித்து நிச்சயம் அவரிடம் பேசுவேன்' என்று கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Telangana man worships photo of Donald Trump every day: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X