வாங்குனா இப்படி ஒரு கேமரா வாங்கணும்: 20mm அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட சோனி கேமரா அறிமுகம்.!
சோனி நிறுவனம் சமீபத்தில் தான் ரியான் பாக்கெட் ஏசி 2 மாடலை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ரியான் பாக்கெட் ஏசி 2 மாடல் ஜப்பானில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில் சோனி நிறுவனம் இந்தியாவில் Vlogகேமராவை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது தற்போது இந்திய சந்தையில் Sony ZV-1F Vlog கேமரா மாடலைத் தான் அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம். குறிப்பாக இந்த புதிய கேமரா தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் Vlog செய்வோர் மற்றும் கிரியேட்டர்களை குறிவைத்து இந்த கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இருக்கும் இந்த சோனி ZV-1F Vlog கேமராவின் வொவென் ஃபேப்ரிக்குகளும் தாவரம் சார்ந்தே பயன்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. GP-VPT2BT ஷூடிங் க்ரிப் மற்றும் வயர்லெஸ் ரிமோட் கமாண்டர், வெளிப்புற மைக்ரோபோன் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த சோனி கேமரா வெளிவந்துள்ளது.
குறிப்பாக சோனி ZV-1F Vlog கேமரா ஆனது 7.5 செ.மீ அளவில் எல்சிடி ட்ச் டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் போக்கே ஸ்விட்ச் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பேக்கிரவுண்ட் பொக்கே மற்றம் ஃபோக்கஸ் இடையே சீராக மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சோனி கேமராவில் 20.1எம்பி ரெசல்யுஷன் கொண்ட எக்ஸ்மோஸ் RS CMOS சென்சார், ஜெய்ஸ் ஆப்டிக்ஸ், அதிக தரமுள்ள ஆடியோ பதிவு செய்யும் வசதி உள்ளன. எனவே இந்த சோனி கேமராவை நம்பி வாங்கலாம். பின்பு விண்ட் ஸ்கிரீன், Directional 3 கேப்ஸ்யுல் மைக் வசதிகளையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
சோனி கேமரா.

சோனி ZV-1F Vlog கேமரா ஆனது ரூ.50,690-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் சோனி சென்டர்கள், ஆல்ஃபா ஃபிளாக்ஷிப் ஸ்டோர்கள், சோனி அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள், ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் இந்த கேமராவை வாங்க முடியும். என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரியான் பாக்கெட் ஏசி 2 மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.
அதாவது இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரியான் பாக்கெட் ஏசி 2 மாடலின் குளிரூட்டும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், உடற்பயிற்சிகளுக்கு மிகவும் பொருத்தமானது என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த புதிய சோனி Reon Pocket Ac 2 சாதனம் ஆனது பொது மக்களின் பயன்பாட்டுக்கு மற்றும் பயணத்துக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனத்தை கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, இதையே குளிர் காலத்தில் வெப்பம் இயக்கியாகவும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் உடல் மேற்பரப்பில் தொடர்புடையதால் இதன் இயந்திர பாகங்கள் துருப்பிடிக்காத வண்ணம் எஃகு கொண்டு உருவாக்கட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மொபைல் செயலி கொண்டு இந்த சாதனத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சோனி நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் இது வியர்வை-புரூஃப்பாக
தயாரிக்கப்பட்டுள்ளாதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த சாதனம் ஜப்பானில் மட்டுமே கிடைக்கிறது. கூடிய விரைவில் இந்த சாதனம் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு Sony Reon Pocket Ac 2 விலை 14,850 யென் (இந்திய மதிப்பில் ரூ. 10,300).


Click it and Unblock the Notifications








