விரைவில் சோனியின் புதிய அதிரடி கேமரா

Posted By: Karthikeyan
விரைவில் சோனியின் புதிய அதிரடி கேமரா

சில வாரங்களுக்கு முன்பு சோனி ஒரு புதிய புல் ப்ரேம் கம்பேக்ட் கேமராவை தயாரித்து வருவதாக பலவகையான வதந்திகள் இணைய தளத்தில் வந்தன. இந்த கேமராவிற்கு ஆர்எக்ஸ்1 என்று பெயர் சூட்டியிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்த வதந்திகள் எல்லாம் உண்மை என்பது போது கனடாவைச் சேர்ந்த ஒரு சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனம் தற்போது ஆர்எக்ஸ்1 கேமராவின் போட்டோக்களை வெளியிட்டிருக்கின்றன.

அதன்படி இந்த புதிய கேமரா பார்ப்பதற்கு சோனியன் டிஎஸ்சி-ஆக்எக்ஸ்100 கேமராவைப் போல் இருக்கிறது. ஆனால் முழு ப்ரேம் சென்சாருடன் வருகிறது. அதோடு பொருத்தப்பட்ட கார்ல் செய்ஸ் 35எம்எம் லென்சுடன் வருகிறது. மேலும் இந்த கேமரா பாப் அப் ப்ளாஷ் மற்றும் பெரிய ப்ளாஷ் கன்களை பொருத்தக்கூடிய ஹாட் ஷூ போன்ற வசதிகளுடன் வருகிறது.

இந்த புதிய கேமரா 2,799 அல்லது 3,000 அமெரிக்கா டாலர்களுக்கு விற்கப்படும் என்று தெரிகிறது. மேலும் வரும் செப்டம்பர் 12 அன்று ஒரு முக்கிய பத்தரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. இந்த நிகழ்வில் இந்த புதிய கேமரா அதிகார்ப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்படும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot