உயர்தரத்தில் வரும் புதிய சோனி கேமரா!

Posted By: Karthikeyan
உயர்தரத்தில் வரும் புதிய சோனி கேமரா!

சோனி புதிதாக சோன் ஆல்பா நெக்ஸ்-7 என்ற கேமராவை களமிறக்க இருக்கிறது. இந்த கேமராவை ஏற்கனவே அறிவித்து விட்டாலும் ஒரு சில் தொழில் நுட்பங்கள் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ள காரணமாக உற்பத்தி பாதிப்பு போன்ற காரணங்களால் இது சந்தைக்கு வர கால தாமதம் ஏற்பட்டது.

இந்த சோனி நெக்ஸ்-7 கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 24.3 மெகா பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கேமரா மெக்னீசியம் அலாய் பாடியைக் கொண்டுள்ளது. இந்த கேமராவில் பில்ட் இன் ஒஎல்இடி மின்னனு வியூவ் பைன்டர் மற்றும் 921 கே டாட் ஆர்ட்டிகுலேட்டிங் எல்சிடி போன்ற வசதிகளும் உண்டு.

அடுத்ததாகப் பார்த்தால் இந்த கேமரா உயர் தரம் கொண்ட 1080/60பி மூவி ரிக்கார்டிங் வசதியையும் கொண்டிருக்கிறது. அதுபோல் இந்த கேமரா தொடர்ச்சியாக வினாடிக்கு 10 ப்ரேம்கள் வீதம் சூட்டிங் செய்யும் வசதியும் கொண்டது. இந்த கேமராவில் பையோன்ஸ் இமேஜ் ப்ராசஸரும் உண்டு.

இந்த சோனியின் புதிய கேமரா ஒரு அட்டகாசமான கேமராவாகும். முதல் பார்வையிலேயே இதன் உயர்ந்த தரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். இந்த கேமரா கருப்பு நிறத்தில் வருகிறது. அதுபோல் மிகத் துல்லியமான படங்களை எடுக்கும் சக்தியும் கொண்டது. இதில் பாப் அப் ப்ளாஷ் வசதியும் உண்டு.

மேலும் இந்த கேமராவில் ஒரு ஜோடி நெறிப்படுத்தும் சக்கரங்கள் உள்ளன. இவை பலவிதமான பணிகளைச் செய்கின்றன. மேலும் பில்ட் இன் வியூவ் பைன்டர் இதன் பின்புறத்தில் உள்ளது. அதற்கு கீழே 3 இன்ச் அளவில் ஒரு எல்சிடி திரை உள்ளது.

இந்த நெக்ஸ்-7 கேமரா ஒரு ட்ரை-நேவி இன்டர்பேஸ் கொண்டுள்ளது. அதன் மூலம் இந்த கேமராவை மிக எளிதாக இயக்க முடியும். இந்த கேமராவின் விலை ரூ.50,000 ஆகும். ஆனால் இதன் லென்சுகளைத் தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot