Home
Camera

ஏராளமான வசதிகளுடன் சோனி நெக்ஸ் 5-என் கேமரா!

By Karthikeyan
ஏராளமான வசதிகளுடன் சோனி நெக்ஸ் 5-என் கேமரா!

சோனி நெக்ஸ் 5என் கேமரா சோனி நெக்ஸ் 5 2ஜி வரிசையில் வரும் கேமரா ஆகும். இந்த கேமரா நெக்ஸ் 3 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸ் 7 கேமராவுக்கும் இடைப்பட்ட ரகத்தில் வருகிறது. இந்த நெக்ஸ் 5என் கேமரா அட்டகாசமான ஸ்டைலில் வருகிறது. இந்த கேமரா சிறியதாக இருந்தாலும் இதில் ஏராளமான தொழில் நுட்பங்களைப் பார்க்க முடியும்.

இந்த நெக்ஸ் 5என் கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அது 16.1 மெகா பிக்சல் சிஎம்ஒஎஸ் ஆப்டிக்கல் சென்சாரைக் கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச இமேஜ் ரிசலூசன் 4912 x 3264 பிக்சல்களாகும். அதே நேரத்தில் இதன் அதிகபட்ச வீடியோ ரிசலூசன் 1920 x 1080 பிக்சல்களாகும். மேலும் இந்த கேமரா 3.1 எக்ஸ் ஆப்டிக்கல் சூமையும் மற்றும் 10.1 எக்ஸ் டிஜிட்டல் சூமையும் கொண்டிருக்கிறது.

இந்த கேமராவில் பேஸ் டிடெக்சன் மற்றும் லைவ் வியூவ் போன்ற வசதிகள் உண்டு. அதோடு இந்த கேமரா எவிஎச்டிசி மற்றும் எம்பிஇஜி 4 வீடியோவையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த கேமரா ஒரு வினாடிக்கு 60 பிரேம்களை வழங்குகிறது.

இந்த கேமராவின் போக்கசின் நீளம் 18 மிமீ முதல் 55 மிமீ ஆகும். அதுபோல் இது 25 ஆட்டோ போக்கஸ் புள்ளிகளையும் கொண்டுள்ளது. இந்த நெக்ஸ் 5என் கேமராவில் லென்ஸ் அபரேசன் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. தூசு பாதிக்காத அளவிற்கு இந்த கேமராவில் பாதுகாப்பு வசதிகள் உண்டு.

இந்த கேமராவில் படம் எடுக்கும் போது கேமரா அசைந்தாலும் படம் தெளிவாக இருக்கும். இந்த கேமரா பொம்மை கேமரா மோட், எச்டிஆர், போஸ்டர் மோட், சாப்ட் போக்கஸ், ரெட்ரோ போட்டோ, மினியாட்சர் போன்ற வசதிகளையும் இந்த கேமரா வழங்குகிறது.

இவ்வாறாக ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த கேமராவின் விலை ரூ.35,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X