தண்ணீருக்குள் துல்லியமாக போட்டோ எடுக்கும் புதிய சோனி கேமரா

By Karthikeyan
|
தண்ணீருக்குள் துல்லியமாக போட்டோ எடுக்கும் புதிய சோனி கேமரா

சோனி ஒரு புதிய கேமராவை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு எடிஆர்-ஜிடபுள்யு77வி என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமராவின் சிறப்பு என்னவென்றால் இந்த கேமரா தூசு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சமாளிக்கும் சக்தி கொண்டதாகும். தற்போது இந்த கேமரா ஜப்பானில் களமிறங்கி இருக்கிறது. விரைவில் ஐரோப்பாவிலும் இந்த கேமரா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேமரா எந்த அளவிற்கு சக்தி வாய்ந்து என்றால் இது தண்ணீரில் 16 அடி ஆழத்தில் 1 மணி நேரம் இருந்தாலும் இந்த கேமரா எந்தவித பாதிப்பும் அடையாது. அதுபோல் தூசும் இந்த கேமராவைத் தாக்க முடியாது. மேலும் இது ஒரு கைக்கு அடக்கமாக கேமரா ஆகும். இதை வெளியில் எடுத்துச் செல்வதும் மிக எளிதாக இருக்கும். அதுபோல் இதை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும்.

இந்த கேமரா பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த கேமரா 1920 x 1080 பிக்சல் ரிசலூசன் கொண்ட 3 இன்ச் அளவில் ஒரு அட்டகாசமான தொடு வசதி கொண்ட டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. ஒரு 10எக்ஸ் ஆப்டிக்கல் சூமும் ஒரு 120எக்ஸ் டிஜிட்டல் சூமும் இந்த கேமராவில் உள்ளன. அதோடு எக்ஸ்மர் ஆர் சிஎம்ஒஎஸ் சென்சாரும் இந்த கேமராவில் உண்டு.

இணைப்பு வசதிகளுக்காக இந்த கேமரா யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த கேமராவில் 1080பி வீடியோ பதிவு செய்யும் வசதியையும் அனுபவிக்கலாம். 16ஜி சேமிப்பைக் கொண்டிருக்கும் இந்த கேமராவின் சேமிப்பை எஸ்டி கார்ட் மூலம் விரிவு செய்ய முடியும்.

இந்த கேமராவில் ஜிபிஎஸ் வசதி உள்ளதால் இதன் மூலம் ஜியோடேக்கிங் சூட்டை எடுக்க முடியும். தண்ணீருக்கு அடியில் இந்த கேமரா மூலம் படம் எடுத்தாலும் வண்ணம் மாறாமல் மிகத் துல்லியமாக படம் எடுக்க முடியும். அதுபோல் வீடியோவும் எடுக்க முடியும்.

இந்த நவீன சோனி கேமராவின் விலை ரூ.46000 ஆகும். இது ஊதா, கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய நிறங்களில் வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X