உறுதியான புதிய சோனி வீடியோ கேமரா!

Posted By: Karthikeyan
உறுதியான புதிய சோனி வீடியோ கேமரா!

சோனி நிறுவனம் கடந்த மாதம் சோனி கேன்டிகாம் ஜிடபுள்யு77வி என்று ஒரு புதிய விடியோ கேமராவை ஜப்பானில் களமிறக்கியது. இந்த மாதம் அந்த கேமராவை அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.

மிகுந்த தரத்துடனும் சூப்பரான செய்திறனுடனும் வரும் இந்த வீடியோ கேமராவின் விலை சற்று அதிகமாக இருப்பதாக பலர் கருதுகின்றனர். அதாவது இந்த கேமரா 700 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது.

ஆனால் தொழில் நுட்பங்களைப் பொறுத்தவரை இந்த கேமரா மிக சூப்பராக இருக்கிறது. அதாவது தண்ணீருக்குள் 16 அடி ஆழத்தில் விழுந்தாலும் இந்த கேமரா எந்தவித பாதிப்பும் அடையாது. அதுபோல் தூசு மற்றும் அதிர்ச்சி ஆகிய எதுவும் இந்த கேமராவை எளிதாக பாதிக்காது.

இந்த புதிய கேமரா சிஎம்ஒஎஸ் சென்சார் மற்றும் பினோஸ் இமேஜ் ப்ராசஸர் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் இது சூப்பரான படங்களை எடுக்கும். அதுபோல் இது எடுக்கும் வீடியோவும் மிகத் துல்லியமாக இருக்கும்.

மேலும் இந்த கேமராவில் ஜிபிஎஸ் ரிசிவர் உள்ளதால் நாம் இருக்கும் இடத்தை இந்த கேமராவின் எல்சிடி டிஸ்ப்ளேயில் அறிந்து கொள்ளலாம்.

இந்த கேமரா 16 ஜிபி இன்டர்னர் சேமிப்பு கொண்டிருப்பதால் திரைப்படங்கள் மற்றும் போட்டோக்களை மெமரி ஸ்டிக் மைக்ரோ மற்றும் மைக்ரோ எஸ்டி எஸ்டிஎச்சி கார்டுகள் மூலம் நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதுபோல் இந்த கேமராவில் இணைப்பு வசதிக்காக மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட்டும் உள்ளன. எனவே இந்த கேமராவை கணினி மற்றும் லேப்டாப்புகளில் மிக எளிதாக இணைக்க முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot