சோனியின் புதிய அட்டகாசமான கேமராக்கள்

Posted By: Karthikeyan
சோனியின் புதிய அட்டகாசமான கேமராக்கள்

கேமரா உலகில் சோனி தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கிறது. அந்த வகையில் தற்போது இரண்டு சினிஅல்ட்டா பிஎல் மவுண்ட் கேமராக்களை களம் இறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராக்களுக்கு பிஎம்டபுள்யு-எப்5 மற்றும் பிஎம்டபுள்யுஎப்55 ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு கேமராக்களும் சூப்பர் 35எம்எம் சென்சார்களைக் கொண்டிருக்கின்றன.

இந்த இரண்டு புதிய கேமராக்களும் ஏறக்குறைய சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. அதாவது இரண்டுமே 4கே சிஎம்ஒஎஸ் இமேஜர்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் உயர்தர கேமராவான பிஎம்டபுள்யு-எப்55 ஒரு குளோபல் ஷட்டரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் அகலமான கலர் காமட்டையும் கொண்டிருக்கிறது. அதனால் இந்த கேமரா 4கே மற்றும் 2கே மற்றும் எச்டி வீடியோக்களை மிகத் தெளிவாக எடுக்க முடியும்.

ஆனால் பிஎம்டபுள்யு-எப்5 கேமரா 2கே மற்றும் எச்டி வீடியோக்களை மட்டுமே எடுக்க முடியும். மேலும் இந்த கேமரா ஒரு ரோலிங் ஷட்டரைக் கொண்டிருக்கிறது. இந்த கேமராக்களில் எம்பிஇஜி-4எச்264 அல்லது சோனியின் எஸ்ஆர் எம்பிஇஜி-4 எஸ்எஸ்டிபி வீடியோக்களை மிக சிறப்பாக பதிவு செய்ய முடியும்.

எப்5 கேமரா 120எப்பிஎஸ் ஸ்லோ மோஷன் ரா எச்டி வீடியோக்களை எடுக்கும் சக்தி கொண்டது.அதே நேரத்தில் எப்55 கேமரா 240எப்பிஎஸ் 2கே வீடியோக்களை மிக அழகாக எடுக்கும் சக்தி கொண்டது.

இந்த இரண்டு புதிய கேமராக்களும் வரும் 2013 பிப்ரவரியில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot