புதிய சோனி கேமரா... துல்லியத்தின் மறுபெயர்!

Posted By: Karthikeyan
புதிய சோனி கேமரா... துல்லியத்தின் மறுபெயர்!

சோனி நிறுவனம் சமீபத்தில் தனது எச்எக்ஸ்100வி கேமரா மாடலைத் தொடர்ந்து சோனி சைபர் ஷாட் எச்எக்ஸ்வ200வி என்ற புதிய கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேமரா முந்தைய 100வி கேமராவை ஒத்திருந்தாலும் இதன் சிறப்பு அம்சங்கள் முற்றிலும் மாறுபட்டவை.

இந்த எச்எக்ஸ்200வி கேமராவின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கொண்டால் இந்த கேமரா 18.2 மெகா பிக்சல் ½.3 இன்ச் சிமோஸ் இமேஜ் சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் எக்ஸ்மோர் ஆர் தொழில் நுட்பத்துடன் கூடிய பேக்லிட் சென்சாரும் இந்த கேமராவில் உண்டு. அதோடு 30எக்ஸ் ஆப்டிக்கல் சூம் லென்சையும் இந்த கேமராவில் பார்க்க முடியும்.

இந்த கேமரா 1080பி எச்டி மூவி பதிவு செய்யும் வசதியைக் கொண்டுள்ளது. இதன் பின்புறம் உள்ள எல்சிடி டிஸ்ப்ளே 920கே டாட் ரிசலூசனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் எலக்ட்ரானிக் வியூவ் பைன்டர் மற்றும் இன்பில்ட் ஜிபிஎஸ் மோடுல் போன்ற வசதிகளும் உண்டு.

இந்த கேமராவில் டெக்சர்டு கிரிப் வசதி உள்ளது. அதனால் இந்த கேமரா பார்ப்பதற்கு அழகாகவும் அதே நேரத்தில் இதை பிடிப்பதற்கு வசதியாகவும் உள்ளது. மேலும் இது ஒரு தரமான கேமரா ஆகும்.

இதன் சென்சார் மிகவும் அதிகமான சென்சிட்டிவிட்டியைக் கொண்டிருக்கிறது. அதனால் இது மிகத் துல்லியமான படங்களை மிக அருமையாக எடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்த கேமராவின் பக்கவாட்டில் உள்ள சுவிட்ஜ் இதன் மேனுவல் சூம் மற்றும் மேனுவல் போக்கஸ் கட்டுப்பாட்டுக்கும் இடையே சிறந்த கருவியாக செயல்படுகிறது. இந்த வசதியை மற்ற சூப்பர் சூம் கேமராக்களில் பார்க்க முடியாது. அதுபோல் இதன் லென்சும் மிக வேகமாக செயலாற்றும் தன்மை கொண்டது.

இந்த எச்எக்ஸ்200வி கேமரா எப்போது சந்தைக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால் வரும் ஏப்ரலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்