Home
Camera

சோனியின் புதிய ஸ்லிம் கேமராக்கள்!

By Karthikeyan
சோனியின் புதிய ஸ்லிம் கேமராக்கள்!

தற்போது வரும் கேமராக்கள் எல்லாமே மிகவும் அல்ட்ரா போர்ட்டபுலாகவும், மிகவும் மெல்லியதாகவும் வருகின்றன. சோனியும் அத்தகைய மெல்லிய கேமராக்களைக் களமிறக்குகிறது.

சோனியின் இந்த புதிய கேமராக்களில் ஒன்றின் பெயர் சோனி டிஎஸ்சி-டிஎக்ஸ்55 ஆகும். இந்த கேமரா மிகவும் மெல்லிய சாதனம் ஆகும். இதன் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது டச் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. அதுபோல் 3டி படம் பிடிக்கும் வசதியும் இதில் உண்டு. அதோடு இந்த கேமரா எவிசிஎச்டி வீடியோ பதிவு செய்யும் வசதியையும் இந்த கேமரா வழங்குகிறது.

இந்த கேமராவின் அடக்கமான டிசைனுக்கு முக்கிய காரணம் அதன் யுஎஸ்பி ஆகும். இந்த கேமரா 12 மிமீ பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா பொன் நிறம், சில்வர் மற்றும் கருப்பு நிறத்தில் வருகிறது.

சோனியின் அடுத்த மெல்லிய கேமரா சோனி சைபர் ஷாட் டிஎஸ்சி-டிஎக்ஸ்55 ஆகும். இந்த கேமரா 3.3 இன்ச் அளவில் ஒஎல்இடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இது ஒரு அல்ட்ரா போர்ட்டபுள் கேமரா ஆகும். இந்த கேமரா 16:9 ஆஸ்பெக்ட் ரேசியோவைக் கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் 3டி படம் எடுத்தல் மற்றும் முழு எச்டி வீடியோ பதிவு போன்ற வசதிகளும் உண்டு.

இந்த கேமராவில் யுஎஸ்பி போர்ட் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் போன்றவையும் உள்ளன. அடுத்ததாக மைக்ரோ எஸ்டி கார்டும் இதில் உண்டு. இதன் எடை 109 கிராம் மட்டுமே. இந்த கேமரா கருப்பு, பொன் நிறம் மற்றும் சில்வர் போன்ற வண்ணங்களில் வருகிறது.

இந்த கேமராவை பார்க்கும் போது அது மிகவும் ஒரு சிறிய பெட்டியைப் போலத் தோன்றும். இதன் லென்சின் மூடி முன்பக்கம் இருக்கிறது. இது பார்ப்பதற்கு படு ஸ்டைலாக இறுக்கிறது. மேலும் இந்த கேமராவில் ஆட்டோ போக்கஸ் மற்றும் ப்ளாஷ் வசதிகளையும் பார்க்க முடியும். இந்த கேமராவின் விலை ரூ.20000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X