Home
Camera

சோனி வழங்கும் கையடக்கமான புதிய சைபர் ஷாட் கேமரா!

By Karthikeyan
சோனி வழங்கும் கையடக்கமான புதிய சைபர் ஷாட் கேமரா!

சோனி நிறுவனம் தனது சைபர் ஷாட் கேமரா வரிசையில் ஒரு புதிய டிஎஸ்சி எச்90 என்ற கேமராவை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய கேமராவில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உண்டு.

குறிப்பாக இந்த எச்90 கேமரா 16.1 மெகா பிக்சல் கொண்ட சூப்பர் எச்எடி சிசிடி இமேஜ் சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் 16 எக்ஸ் ஆப்டிக்கல் சூமும் மற்றும் 20 எக்ஸ் டிஜிட்டல் சூமும் உண்டு. இந்த கேமரா 4608 x 3456 பிக்சல் இமேஜ் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த கேமராவின் டிசைன் மெல்லியதாக மற்றும் பக்காவாக இருக்கிறது. இந்த கேமரா 4:3 மற்றும் 16:9 இமேஜ் அஸ்பக்ட் ரேசியோவை வழங்குகிறது.

இந்த கேமராவில் பையோன்ஸ் ப்ராசஸர் உள்ளதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும். இந்த கேமராவில் படம் எடுக்கும் போது கேமரா அசைந்தாலும் துல்லியமான படத்தை வழங்கும். இந்த கேமரா 24 முதல் 388 மிமீ தூர போக்கசைதக் கொண்டிருப்பதால் எத்தகைய வெளிச்சத்திலும் மிகப் பிரகாசமான படங்களை எடுக்கும்.

இந்த கேமராவில் ப்ளாஷ், ஆட்டோ போக்கஸ், மேனுவல் போக்கஸ் மற்றும் 5 செமீ கொண்ட மார்க்கோ போக்கஸ் போன்ற வசதிகளும் உள்ளன. இதன் 3 இன்ச் எல்சிடி டிஎப்டி டிஸ்ப்ளே 460,800 டாட்டுகளை வழங்குகிறது.

இந்த கேமரா எப்3.3 முதல் எப்5.9 வரையிலான அபர்சரை வழங்குகிறது. அதுபோல் இந்த கேமரா அதிவேக சட்டர் வேகத்தையும் கொண்டிருக்கிறது. மேலும் இதன் வீடியோ பதிவு 1280 x 720 ஆகும். மற்ற அம்சங்களைப் பார்த்தால் இந்த கேமரா சேமிப்பு வசதிக்காக எஸ்டி,எடிஎச்சி, ஸ்டிக் டூவோ, ஸ்டிக் டூவோ ப்ரோ, எச்ஜி டூவோ, யுஎஸ்பி 2.0 மற்றும் மினி எச்டிஎம்ஐ போர்ட் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது.

இறுதியாக இந்த கேமரா 105 x 60x 34 மிமீ பரப்பளவுடன் 222 கிராம் எடையுடன் வருகிறது. இதன் இன்டர்னல் மெமரி சேமிப்பு 27 எம்பி ஆகும். இந்த கேமரா கருப்பு, வெள்ளி மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் வருகிறது.

இந்த சைபர் ஷாட் கேமராவை ரூ.15,500க்கு வாங்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X