அனைத்து கேமராவிலும் குறைகளை போக்க சோனி தீவிரம்!

Posted By: Karthikeyan
அனைத்து கேமராவிலும் குறைகளை போக்க சோனி தீவிரம்!

சோனி களமிறக்கிய எ77 மற்றும் எ65 எஸ்எல்டி கேமராக்கள் பல பிரச்சினைகளை சந்தித்தது. குறிப்பாக அவற்றில் இருந்த அட்ஜஸ்டிங் எக்ஸ்போசர் செட்டிங் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஆனால் இப்போது அந்த சிரமத்தைப் போக்கும் வகையில் சோனி இந்த இரண்டு கேமராக்களுக்கும் பர்ம்வேர் வெர்சன் 1.05ஐ அப்டேட் செய்ய இருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே இந்த கேமராக்களில் இருந்த பிரச்சினைகள் முற்றிலும் களையப்படும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக இந்த அப்டேட் மூலம் இந்த இரண்டு கேமராக்களிலும் மிக வேகமான கோல்டு ஸ்டார்ட்அப், முன்புற மற்றும் பின்புற டயல்கலில் இருந்து உடனடி ரெஸ்பான்ஸ், மற்றும் படங்களை ஆட்டோ ரிவீயூவ் செய்யும் வசதி போன்றவற்றை பார்க்க முடியும்.

அதோடு சோனி இந்த இரண்டு கேமராக்களிலும் இன் கேமரா ஷேடிங், 11 எ-மவுண்ட் லென்ஸ்களுக்கான க்ரோமேட்டிக் அப்ரேசன் இழப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது. இறுதியாக எ77 கேமரா போனசாக ஆட்டோ போக்கஸ் சிஸ்டத்தையும் பெறுகிறது. அதனால் எந்தவிதமான வெளிச்சத்திலும் மிக சூப்பரான படங்களை எடுக்க முடியும்.

இறுதியாக இந்த அப்டேட் மூலம் இந்த சோனி கேமராக்கள் பல மடங்கு விற்பனையாகும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்