Home
Camera

அணிவகுக்கும் சாம்சங்கின் புதிய கேமராக்கள்!

By Karthikeyan
அணிவகுக்கும் சாம்சங்கின் புதிய கேமராக்கள்!

சாம்சங் நுழையாத துறையே இல்லை என்று செல்லலாம். ஏனெனில் எலெக்ட்ரானிக் மற்றும் கணினி தொழில் நுட்பத்தின் அனைத்துத் துறைகளிலும் களமிறங்கி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் சாம்சங்கின் கேமராக்களும் மிகவும் தரம் வாய்ந்தவையாக இருக்கும். இந்தியாவில் தனது புதிய கேமராக்களை அறிமுகம் செய்யவிருப்பதாக சமீபத்தில் சாம்சங் அறிவித்திருக்கிறது.

அதாவது 4 வகையான வரிசைகளில் தனது புதிய ஸ்மார்ட் கேமராக்களை சாம்சங் இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய கேமராக்களுக்கு டபுள்யுபி100, எஸ்டி200எப், டிவி300எப், டிவி100, இஎஸ்90 மற்றும் எஸ்டி66 என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

சாம்சங் டபுள்யுபி100 கேமரீ 16எம்பி இமேஜ் சென்சாருடன் வருகிறது. மற்றும் உயர்தர சூம் லென்ஸ், அல்ட்ரா அகல லென்ஸ், டூவல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், ஸ்மார்ட் பில்டர், மேஜிக் ப்ரேம், லைவ் பனோரமா மோட் மற்றும் எஎ பேட்டரிகளுடன் இந்த கேமரா வருகிறது. இந்த கேமரா ரூ.15,000க்கு விற்கப்பட இருக்கிறது.

டிவி300எப் கேமரா வைபை வசதியுடன் வருகிறது. அதனால் இந்த கேமரா மூலம் எடுத்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மிக எளிதா இணைய தளங்களில் பதிவேற்றம் செய்ய முடியும். இந்த டூவல் வியூவ் கேமரா 16எம்பி வசதியை வழங்குகிறது. இதன் முன்பக்கம் 1.5 இன்ச் அளவில் ஒரு எல்சிடி டிஸ்ப்ளேயும் அதே நேரத்தில் இதன் பின்பக்கம் 3 இன்ச் அளவில் ஒரு எல்சிடி திரையும் உள்ளன. இந்த கேமரா ரூ.12,000க்கு விற்கப்பட இருக்கிறது.

சாம்சங் டிவி100 ஒரு டூவல் எல்சிடி டிஜிட்டல் கேமரா ஆகும். கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த கேமரா டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் ஸ்மார்ட் பேஸ் ரெககினிசன் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த கேமரா ரூ.9,000க்கு விற்கப்பட இருக்கிறது.

அடுத்ததாக சாம்சங் எஸ்டி200எப் கேமராவை எடுத்துக் கொண்டால் இது 3 இன்ச் அளவில் ஒரு டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 16 எம்பி சிசிடி இமேஜ் சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. அதோடு ஆப்டிக்கல் சூம் வசதியையும் வழங்குகிறது. மேலும் யுஎஸ்பி மற்றும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதிகளுடன் வரும் இந்த கேமரா ரூ.12,500க்கு விற்கப்பட இருக்கிறது.

சாம்சங் எஸ்டி66 ஒரு கைக்கு அடக்கமான கேமராவாகும். இது 2.7 இன்ச் அளவில் டிஸ்ப்ளே மற்றும் 5எக்ஸ் ஆப்டிக்கல் சூம் ஆகிய வசதிகளுடன் வருகிறது. இந்த கேமரா ரூ.8,000க்கு விற்கப்பட இருக்கிறது.

இறுதியாக சாம்சங் இஎஸ்90 கேமராவை எடுத்துக் கொண்டால் இது மலிவு விலையில் வருகிறது. அதாவது இது ரூ.6,500க்கு விற்கப்பட இருக்கிறது. எனவே இதை பெரும்பாலோர் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த கேமராவில் 15 வகையான போட்டோ மோடுகளும் மற்றும் 4 வகையான மூவி மோடுகளும் உள்ளன. அதோடு இந்த கேமரா 2.7 இன்ச் டிஸ்ப்ளே, சிசிடி சென்சார் மற்றும் 5எக்ஸ் ஆப்டிக்கல் சூம் ஆகிய வசதிகளுடன் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X