சாம்சங் வழங்கும் கையடக்க மிரர்லெஸ் கேமரா!

கேமரா உலகிலும் ஒரு தனி முத்திரையைப் பதித்துவரும் சாம்சங் சமீபத்தில் ஒரு கைக்கு அடக்கமான மிரர்லெஸ் கேமராவை களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு சாம்சங் என்எக்ஸ்1000 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமராவை ரூ.36,000க்கு வாங்கலாம்.
இந்த கேமரா பல சூப்பரான தொழில் வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த கேமரா மிகத் துல்லியமான மற்றும் மிகத் தெளிவான படங்களை மற்றும் வீடியோக்களை எடுக்கும். அதோடு இதில் வைபை இணைப்பும் உள்ளதால் இது எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும்.
இந்த கேமராவி்ல் மிகவும் சக்தி வாய்ந்த 20-50 எம்எம் லென்ஸ் மற்றும் 20.3எம்பி சிஎம்ஒஎஸ் சென்சார் ஆகியவை உள்ளன. இதன் 3 இன்ச் எல்சிடி திரை மிகத் துல்லியமாக இருக்கும். இந்த கேமராவில் 1080பி வீடியோ பதிவு செய்யும் வசதியும் உண்டு. இந்த கேமரா மிகவும் வேகமாக இயங்கும் ஆற்றல் கொண்டது. மேலும் இதில் பிசி ஆட்டோ பேக்கம், ஸ்மார்ட் ஆட்டோ செட்டிங் மற்றும் ஸ்மார்ட் பில்டர்ஸ் போன்ற வசதிகளும் உள்ளன.
இந்த என்எக்ஸ்1000 கேமரா வெள்ளை, பிங்க் மற்றும் கருப்பு ஆகிய 3 நிறங்களில் வருகிறது. குறிப்பாக பிங்க் நிற கேமரா பெண்களைப் பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மற்றும் கருப்பு நிறக் கேமராக்கள் அலுவலகப் பணியாளர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கேமராவை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். அதாவது கேமராவிற்கு புதியவர்கள் கூட இந்த கேமராவில் பழகலாம் அந்த அளவிற்கு இந்த கேமரா மிக எளிதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications