180டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் சாம்சங் கேமரா!

கேமராச் சந்தையி்ல் இன்னுமொரு புதிய கேமராவை சாம்சங் நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு எம்வி900எப் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு சூப்பரான பாயின்ட் சூட் கேமரா ஆகும். இதன் 16.3 எம்பி சிஎம்ஒஎஸ் சென்சார் இந்த கேமராவிற்கு உயர்தரத்தை வழங்கும். அதோடு இந்த கேமராவில் இருக்கும் 180 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் வசதி கொண்ட மல்டிவியூவ் டிஸ்ப்ளே பெற்றிருக்கிறது.
இந்த புதிய கேமரா 3.3 இன்ச் அளவில் டபுள்யுவிஜிஏ அமோலெட் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக இருக்கும். அதுபோல் இந்த டிஸ்ப்ளே மல்டி வியூவ் வசதி கொண்டிருப்பதால் இது எடுக்கும் போட்டோக்களைப் பல கோணத்தில் பார்த்து மெருகேற்ற முடியும். மேலும் இதன் போட்டோக்களும் மிகத் துல்லியமாக இருக்கும்.
இந்த கேமரா வைபை வசதியுடன் வருவதால் இதில் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக பேஸ்புக், பிக்காசா மற்றும் யுடியூப் போன்ற சமூக வளைத்தளங்களுக்கு நேரடியாகப் பதிவேற்றம் செய்ய முடியும். மேலும் இந்த கேமராவை, சாம்சங்கின் டிவிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் மிக எளிதாக இணைக்க முடியும். அதோடு இதில் எச்டிடிவி ப்ளேபேக் வசதியும் உள்ளது.
இந்த மல்டிவியூவ் வசதி கொண்ட சாம்சங் கேமரா ரூ.18,000க்கு விற்கப்பட இருக்கிறது. மேலும் இது வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications