Home
Camera

பளிச்சிடும் புகைப்படங்கள் எடுக்கும் கேமராக்களின் ஒப்பீடு!

By Super
பளிச்சிடும் புகைப்படங்கள் எடுக்கும் கேமராக்களின் ஒப்பீடு!

சிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்கும் சாம்சங் நிறுவனம், சிறந்த கேமராவினையும் வழங்கியுள்ளது. இதனால் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி கேமராவை மற்ற கேமராவுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இதற்காக நிக்கான் கூல்பிக்ஸ் எஸ்-800-சி கேமரா மற்றும் சாம்சங் கேலக்ஸி கேமரா பற்றிய ஒப்பீட்டினை இங்கே தெரிந்து கொள்லாம்.

சாம்சங் கேலக்ஸி கேமரா ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த கேமரா 4.8 இஞ்ச் திரை வசதியின் மூலம் சூப்பர் க்ளியர் எல்சிடி தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். இந்த திரையில் அழகாக 1280 x 720 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். இதில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வழங்கப்படும்.

16 மெகா பிக்ஸல் கொண்ட கேலக்ஸி கேமரா 21X ஆப்டிக்கல் சூம் வசதியினை வழங்கும். இதில் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி மட்டும் அல்லாமல், 32 ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினையும் பெறலாம். இதில் 1,650 லித்தியம் அயான் பேட்டரி, 3ஜி நெட்வொர்க் மற்றும் வைபை வசதியினை எளிதாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி கேமரா ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளம் கொண்டதாக இருப்பதினால், இதில் கேமரா அப்ளிக்கேஷன்களை சிறப்பாக பயன்படுத்த முடியும். அடுத்தடுத்து புகைப்படங்களை பார்க்க இதில் இருக்கும் ஃபிலிம்ஸ்ட்ரிப் வசதியினை எளிதாக பெற முடியும். இதன் மூலம் எளிதாக ஸ்வைப் செய்யவும் முடியும், தேவையில்லாத புகைப்படங்களை சுலபமாக அகற்றலாம்.

அனிமேஷன் வசதிக்காக இதில் பிரத்தியேக அனிமேஷன் ஸ்வைப் வசதியும் வழங்கப்படுகிறது. இதில் இருக்கும் வசதிகளை பார்க்கும் போது, இதன் சிறிய குறைகளை பற்றியும் சற்று பார்க்கலாம். இந்த கேமராவின் விலை சற்று அதிகமாக இருக்கும். அடுத்து இந்த கேமராவில் சூமிங் வசதி மற்ற டிஜிட்டல் கேமராவினை ஒப்பிட்டு பார்க்கும் போது சற்று குறைவானதாக இருக்கும்.

கூல்பிக்ஸ் எஸ்-800-சி கேமரா அடிப்படையில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டதாக இருக்கும். 3.5 இஞ்ச் அமோலெட் தொடுதிரை வசதி. இந்த திரையில் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று ஆரம்பித்து இந்த கேமராவில், வைபை, ப்ளூடூத், 16 மெகா பிக்ஸல், ஜிபிஎஸ், 1,050 எம்ஏஎச் பேட்டரி என்று சகித வசதிகளையும் பயன்படுத்த முடியும்.

இந்த கேமராவில் கூற வேண்டிய முக்கிய வசதி இதன் வைபை. இதனால் இன்டர்நெட்டுன் எளிதாக கண் இமைக்கும் நேரத்தில் இணைக்க முடியும். எந்த எலக்ட்ரானிக் சாதனமாக இருப்பினும், இதில் இந்த வசதி கொஞ்சம் மேம்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று வாடிக்கையாளர்களை நினைக்க வைக்கும். டாப்-5 கேமராக்களை பற்றியும் தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் இந்த கூல்பிக்ஸ் எஸ்-800-சி கேமராவின் பேட்டரியினை கூறலாம். கேலக்ஸி கேமராவினை ஒப்பிட்டு பார்க்கும் போது, கூல்பிக்ஸ் கேமராவின் பேட்டரி சற்று குறைந்த ஆற்றலை வழங்குவதாக தெரிகிறது. மற்றபடி இந்த கேமரா சிறப்பான புகைப்படங்களை எடுக்க சிறந்த துல்லியம் கொண்ட கேமராவாக இருக்கும் என்று கூறலாம். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X