Home
Camera

நிக்கனைத் தொடர்ந்து ஆன்ட்ராய்டு கேமராவைக் களமிறக்கும் சாம்சங்

By Karthikeyan
நிக்கனைத் தொடர்ந்து ஆன்ட்ராய்டு கேமராவைக் களமிறக்கும் சாம்சங்

கடந்த வாரம்தான் நிக்கன் நிறுவனம் எஸ்800சி என்ற அன்ட்ராய்டு பவர் சூட் கேமராவை அறிமுகம் செய்து வைத்தது. அதற்குள் சாம்சங்கும் தனது பங்கிற்கு ஒரு புதிய ஆன்ட்ராய்டு கேமராவைக் களமிறக்க இருக்கிறது. இந்த சாம்சங் ஆன்ட்ராய்டு கேமரா சாம்சங்கின் கேலக்ஸி குடும்பத்திலிருந்து வர இருக்கிறது.

இந்த சாம்சங் கேமரா கேலக்ஸி எஸ் IIIஐ போல் தோற்றமளிக்கும். இந்த கேமரா 16எம்பி சென்சாரைக் கொண்டிருக்கும். அதனால் இதன் சூம் சூப்பராக இருக்கும். அடுத்ததாக இந்த கேமராவில் 4.8 இன்ச் அளவில் ஒரு சூப்பர் அமோலட் டிஸ்ப்ளே உள்ளது. இதில் சாம்சங்கின் உயர்ந்த டிஸ்ப்ளே டெக்னாலஜி இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

மேலும் இந்த கேமரா வைபை மற்றும் வைபை+3ஜி போன்ற இணைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். அதோடு இந்த கேமரா ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்த சாம்சங் கேமராவைக் கடைகளில் பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X