சாம்சங் வழங்கும் 2 புதிய 'மிரர்லெஸ்' கேமராக்கள்!

Posted By: Karthikeyan
சாம்சங் வழங்கும் 2 புதிய 'மிரர்லெஸ்' கேமராக்கள்!

சாம்சங் தற்போது 2 புதிய மிரர்லெஸ் கேமராக்களை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கேமராக்களுக்கு என்எக்ஸ்210 மற்றும் என்எக்ஸ்20 என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு கேமராக்களும் ஏராளமான ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன.

இந்த இரண்டு சாம்சங் கேமராக்களும் 5472 x 3648 ரிசலூசன், 20.3 எம்பி, எபிஎஸ்-சி சிஎம்ஒஎஸ் சென்சார், சென்சார் போட்டோ டிடக்டர், மேனுவல் போக்கஸ், யுஎஸ்பி, ரிமோட் கண்ட்ரோல், எச்டிஎம்ஐ, மல்டி மோசன் பதிவு வசதி, லித்தியம் அயன் பேடடரி, 1080/30பி வீடியோ மற்றும் வைபை போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன.

என்எக்ஸ்20 டிஎஸ்எல்ஆர் கேமராவைப் போல ஒத்திருக்கிறது. இதில் எஸ்விஜிஎ இவிஎப் வசதி உள்ளது. இதற்கு முன் வந்த சாம்சங் என்எக்ஸ்10 கேமராவை ஒத்திருக்கிறது.

சாம்சங் என்எக்ஸ்210 கேமரா என்எக்ஸ்200 கேமராவை ஒத்திருக்கிறது. இந்த கேமராவில் ஐபங்க்சன் பட்டனும் இருக்கிறது.

என்எக்ஸ்20 கேமரா வரும் மே மாதத் தொடக்கத்தில் வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.50000மாக இருக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் என்எக்ஸ்210 கேமரா மே மாத இறுதியில் வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.45000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்