ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் லேப்டாப்புக்கு மூடுவிழா?

Posted By: Karthikeyan
ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் லேப்டாப்புக்கு மூடுவிழா?

கடந்த ஆண்டின் இறுதியில் ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் விற்பனைக்கு வந்தது. ஆனால் வந்த சிறிது காலத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான இந்த டிவைசை வழங்க முடியாத அளவிற்கு இது விற்பனையில் சாதனை புரிந்தது. ஆனால் இப்போது வந்திருக்கும் புதிய பிரச்சினை என்னவென்றால் இதை வாங்கியவர்கள் இந்த டிவைசில் ஏராளமான பிரச்சினைகள் இருப்பதாக புகார்களை எழுப்புகின்றனர்.

முதல் புகார் என்னவென்றால் இந்த லேப்டாப்பில் உள்ள ஜிபிஎஸ் உறுதி இல்லாமல் இருக்கிறது என்பதாகும். அதனால் இந்த டிவைஸ் சிக்னலைப் பெற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு சிக்னலைப் பெற்றாலும் நீண்ட நேரம் இந்த சிக்னல் இருப்பதில்லை.

இரண்டாவது புகார், இந்த டிவைஸ் இயங்கிக் கொண்டிருக்கும் போது தானாகவே நின்று விடுகிறது என்பதாகும். அவ்வாறு ஆகும் போது அதை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படிச் செய்தாலும் இந்த லேப்டாப் நீண்ட நேரம் இயங்குவதில்லை. இதனால் இந்த லேப்டாப்பின் நம்பகத் தன்மை மீது கேள்வி எழுகிறது.

வாடிக்கையாளர்கள் சில்லறை வர்த்தகர்கள் மூலம் இந்த புகார்களைக் கூற சில்லறை வர்த்தகர்கள் இப்போது ஆசஸ் நிறுவனத்திற்குத் தெரிவித்திருக்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள ஒரு ஆசஸ் சில்லைறை வர்த்தகர் இந்த பிரச்சனைகளின் காரணமாக ட்ரான்ஸ்பார்மர் லேப்டாப்பின் விற்பனையை நிறுத்திவிட்டார்.

மேலும் இங்கிலாந்தில் உள்ள க்ளோவ் என்ற சில்லறை வர்த்தகர் ஏற்கனவே வந்து இறங்கி இருக்கும் எல்லா ட்ரான்ஸ்பார்மர்களும் பரிசோதனை செய்த பின்பே மீ்ண்டும் விற்கப்படும் என்று கூறி இருக்கிறார்.

இப்போது ஆசஸ் நிறுவனம் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முழு வீச்சில் களம் இறங்கி இருக்கிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் ஆகியோரிடமிருந்து வரும் புகார்களைக் கரிசனையுடன் வாங்கி அவற்றக் களையத் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றது.

இந்த பிரச்சினைகளைத் தீர்க்க பர்ம்வேரை ஆசஸ் அப்க்ரேட் செய்யும் என்று தெரிகிறது. மேலும் இந்த அப்டேட் ஆசஸின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விரைவில் வரும் என்று தெரிகிறது. ஆசஸ் இந்த பிரச்சினைகளை எல்லாம் விரைவில் களைந்து இழந்த வாடிக்கையாளர்களைப் பெற்றுவிடும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot