Home
Camera

மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன?

ஜியோ நிறுவனம் அன்மையில் இலவச அழைப்புகள் கிடையாது எனக் கூறி, நமிடத்திற்கு 6பைசா என்கிற கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து பல்வேறு மக்கள் ஜியோ-வை விமர்ச்சித்து வருகின்றனர்.

அந்த திட்டங்கள் என்ன?

அந்த திட்டங்கள் என்ன?

இந்நிலையில் ஜியோ நிறுவனம் சத்தமில்லாமல் அதன் இரண்டு திட்டங்களை நீக்கியது,அந்த திட்டங்கள் என்ன? நீக்கியதற்க்கான காரணங்கள் என்ன? உள்ளிட்ட தகவல்களை முழுமையாக பார்ப்போம் வாங்க.

 ரூ.19 மற்றும் ரூ.52

ரூ.19 மற்றும் ரூ.52

ஜியோ நிறுவனம் தற்சமயம் ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களைத் தான் நீக்கியுள்ளது. குறிப்பாக ரூ.19சாசெட் பேக் என்று கூறப்படும் திட்டம் ஆனது ஒரே ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். பின்பு ரூ.52 திட்டமானது மொத்தம் ஏழு நாட்களுக்கு செல்லுபடியை கொண்டது ஆகும்.

காம்போ திட்டங்கள்

காம்போ திட்டங்கள்

இப்போது ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களை நீக்கிவிட்டதால், பயனர்களுக்கான காம்போ திட்டங்கள் ஆனது ரூ.98-ல்தொடங்குகிறது. இந்த 98ரூபாய் திட்டமானது 28நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும்.

ஜனவரி மாதம்

ஜனவரி மாதம்

குறிப்பாக பயனர்கள் ஐ.யூ.சி டாப்-அப்களுடன் சேர்ந்து சாசெட் பேக்குகளை ரீசார்ஜ் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால் ஜியோ நிறுவனம் இதை நீக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த சாசெட் திட்டங்கள் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது

150எம்பி அளிவிலான 4ஜி டேட்டா

150எம்பி அளிவிலான 4ஜி டேட்டா

இப்போது நீக்கப்பட்ட ரூ.19-திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், 150எம்பி அளிவிலான 4ஜி டேட்டா மற்றும் 20எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை ஒரு நாள் என்கிற செல்லுபடியாகும் நன்மைகளில் வழங்கப்பட்டது.

 1.05ஜிபி அளவிலான டேட்டா

1.05ஜிபி அளவிலான டேட்டா

அதேபோல் ரூ.52-திட்டமானது 1.05ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 70எஸ்எம்எஸ் உள்ளிட்டநன்மைகளை ஏழு நாட்கள் செல்லுபடியாகும் காலத்தி;ன் கீழ் வழங்கியது. குறிப்பாக இந்த 52ரூபாய் திட்டமானது
JioTV, JioCinema, JioSaavn போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலையும் வழங்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது

 28நாட்களுக்கு வழங்குகிறது

28நாட்களுக்கு வழங்குகிறது

அதேபோல் ரூ.98-ல் தொடங்கும் ஜியோ திட்டமானது 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 300எஸ்எம்எஸ்
உள்ளிட்ட சலுகைகளை மொத்தம் 28நாட்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக மக்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யவார்கள்என ஜியோ நிறுவனம் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Removes Rs 19 and Rs 52 Sachet Packs for Prepaid Users: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X