பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் தளங்கள் வழியே விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

அட்டகாசமான விலை:
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.

ரியல்மி சி2 டிஸ்பிளே:
ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடல் 6.01-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அசத்தலான சிப்செட் வசதி:
ரியல்மி சி2 ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி உள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அருமையான கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகன்டரி கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்து, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
ரியல்மி சி2 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, டூயல்-சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications