Home
Camera

மிரர்லெஸ் தொழில்நுட்பம் கொண்ட புதிய பென்டக்ஸ் கேமரா!

By Karthikeyan
மிரர்லெஸ் தொழில்நுட்பம் கொண்ட புதிய பென்டக்ஸ் கேமரா!

பென்டக்ஸ் நிறுவனம் ஒரு புதிய பெரிய மிரர்லஸ் கேமராவைக் களமிறக்குகிறது. இந்த கேமராவிற்கு பென்டக்ஸ் கே-01 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. முதல் பார்வையிலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்த கேமரா விற்பனையில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேமரா பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. அதாவது 16எம்பி எபிஎஸ்-சி, 3 இன்ச் எல்சிடி திரை, ஜேபிசி மற்றும் டிஎன்ஜி ரா பார்மட் பதிவு, எச்டிஆர், போக்கஸ் பீக்கிங் மோட், 1080பி வீடியோ, பில்ட் இன் பிளாஷ், ரிசார்ஜ் வசதி கொண்ட லயன் பேட்டரி, பல மொழிகளை சப்போர்ட் செய்யும் வசதி மற்றும் 16 கஸ்டம் செயல்பாடு போன்ற தொழில் நுட்பங்களுடன் இந்த கேமரா களம் இறங்குகிறது.

இந்த கேமராவில் எஸ்டி, எஸ்டிஎச்சி மற்றும் எஸ்டிஎக்ஸ்சி போன்ற வசதிகள் உள்ளதால் இதன் மெமரியை விரிவு செய்ய முடியும். மேலும் இது ஷேக் ரிடக்சன் சிஸ்டம் கொண்டிருப்பதால் இதில் படம் எடுக்கும் போது கேமரா அசைந்தாலும் மிகத் துல்லியமான படங்களை எடுக்கும் சக்தி கொண்டுள்ளது. அதோடு இதில் மல்டிபுள் சூட்டிங் மோட் வசதியும் உள்ளது.

இந்த கேமராவில் உள்ள பட்டன்கள் மற்றும் சுவிட்ச்சுகள் ஆகியவை பொம்மைகள் வடிவத்தில் இருக்கின்றன. இந்த கேமரா சிறியதாக இருப்பதால் இதை ஒரு சிறிய பெட்டியில் வைத்து இதை மிக எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியும். இந்த கேமரா கருப்பு மற்றும் மஞ்சள் கலவையில் வருகிறது. இதன் விலை ரூ.38000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X