பயணத்தை மகிழ்ச்சியாக்கும் புதிய பென்டக்ஸ் கேமரா

Posted By: Karthikeyan
பயணத்தை மகிழ்ச்சியாக்கும் புதிய பென்டக்ஸ் கேமரா

பென்டக்ஸ் நிறுவனம் ஒரு புதிய டிஜிட்டல் கேமராவை வரும் செப்டம்பரில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு பென்டக்ஸ் எக்ஸ்-5 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மிகவும் அழகாக இருக்கும் இந்த கேமரா ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த கேமராவில் இருக்கும் உயர்தர ஆப்டிக்கல் 26எக்ஸ் சூப்பர்-டெலிபோட்டோ சூம் லென்ஸ் அருமையான மற்றும் தெளிவான போட்டோக்களை எடுக்கும் சக்தி வாய்ந்தது.

பயணத்தின் போது இந்த கேமராவை மிக எளிதாகப் பயன்படுத்தலாம் என்ற பென்டக்ஸின் விற்பனைப் பிரிவு மேலாளர் ஜான் கார்ல்சன் கூறுகிறார்.

இந்த கேமரா 3.0 இன்ச் அளவில் உயர்தரமான ஒரு எல்சிடி திரையைக் கொண்டிருக்கிறது. எடுத்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இந்த திரையில் தெளிவாக பார்க்கலாம்.

இந்த கேமரா சூப்பர் ரிசலூசன் டெக்னாலஜி மற்றும் நைட் சீன் சூட்டிங் மோட் போன்ற வசதிகளைக் கொண்டிருப்பதால் இருட்டில் போட்டோ எடுத்தாலும் மிகத் துல்லியமாக இருக்கும்.

மேலும் இந்த கேமரா ஷேக் ரிடக்சன் சிஸ்டம் கொண்டிருப்பதால் போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் போது கேமரா அசைந்தாலும் போட்டோ மற்றும் வீடியோ ஆகியவை மிகத் தெளிவாக இருக்கும். இந்த கேமராவில் எச்டி மூவி ரிக்கார்டிங்கும் செய்ய முடியும்.

மேலும் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் இந்த கேமரா 279.95 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்