Home
Camera

ரூ.10,990 விலையில் பானசோனிக் வழங்கும் புதிய கேமரா!

By Karthikeyan
 ரூ.10,990 விலையில் பானசோனிக் வழங்கும் புதிய கேமரா!

பனோசோனிக் நிறுவனத்தின் கேமராக்களுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு எப்போதுமே உண்டு. மக்களின் விருப்பங்களை நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் பனோசோனிக் தற்போது ஒரு புதிய கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு பனோசோனிக் லுமிக்ஸ் எஸ்இஸட்1 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த புதிய கேமரா பார்ப்பதற்கு சூப்பராக அழகாக மற்றும் ஸ்டைலாக இருக்கிறது. மேலும் இந்த கேமரா மிகவும் மெல்லியதாக இருப்பதால் இதை வெளியில் எடுத்துச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும். அதோடு இந்த கேமரா வெள்ளி, சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் மிக அட்டகாசமாக வருகிறது.

பனோசோனிக்கின் புதிய லுமிக்ஸ் கேமரா தொழில் நுட்பங்களிலும் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது. இதன் முன் பகுதியில் லுமிக்ஸ் முத்திரை, பெரிய லென்ஸ், எஎப் அசிஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் ஆகியவை உள்ளன. இதன் பின்பகுதியில் 2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கேமராவை இயக்குவதற்கான பட்டன்கள் ஆகியவை உள்ளன. இது ஒரு உறுதியான கேமராவும் கூட.

இணைப்பு வசதிகளைப் பொருத்தவரை இந்த கேமராவில் யுஎஸ்பி வசதி உள்ளது. இந்த வசதி மூலம் இந்த கேமராவை கணினி மற்றும் டேப்லெட்டுகளில் இணைக்க முடியும். அதோடு இந்த கேமராவில் மெமரி கார்டு வசதியும் உள்ளது.

இந்த கேமராவில் 10எக்ஸ் ஆப்டிக்கல் சூம் மற்றும் எம்இஜிஎ ஒஐஎஸ் ஆகியவை இருப்பதால் மிகத் தரமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் போட்டோ எடுக்கும் போது கேமரா அசைந்தாலும் போட்டோ மிகத் துல்லியமாக இருக்கும்.

இந்த புதிய கேமராவில் 16 எம்பி சிசிடி சென்சார் இருப்பதால் ரிசலூசனும் அஸ்பக்ட் ரேசியோவும் பக்காவாக இருக்கும். அதனால் இருட்டிலும்கூட சூப்பரான படங்களை எடுக்க முடியும்.

இந்த கேமராவை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். அதற்கான மெனு மிக எளிமையாக கேமராவில் தரப்பட்டுள்ளன. மேலும் பல வசதிகளுடன் வரும் இந்த கேமரா இந்தியாவில் ரூ.10,990க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X