எண்ணிலடங்கா வசதிகளுடன் புதிய பானசோனிக் கேமரா

Posted By: Karthikeyan
எண்ணிலடங்கா வசதிகளுடன் புதிய பானசோனிக் கேமரா

பனோசோனிக் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய பாயிண்ட் சூட் கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு லுமிக்ஸ் எல்எக்ஸ்7 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா வீனஸ் என்ஜின் மற்றும் 10.1 எம்பி ரிசலூசன் கொண்ட சிஎம்ஒஎஸ் சென்சார் ஆகிய தொழில் நுட்பங்களுடன் வருகிறது. மேலும் இந்த பாக்கெட் டிஜிட்டல் கேமரா பல சூப்பரான வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த கேமரா மிகவும் வேகமாக இயங்கும் தன்மை கொண்டது. அடுத்ததாக இதன் சிஎம்ஒஎஸ் சென்சார் இது எடுக்கும் போட்டோக்களுக்குத் துல்லியத்தையும் அதே நேரத்தில் மிகத் தெளிவையும் வழங்கும்.

இந்த கேமராவில் இருக்கும் வீனஸ் என்ஜின் இந்த கேமராவிற்கு நவீன சிக்னல் ப்ராசஸிங்கை வழஹ்குகிறது. மேலும் இதில் இன்டலிஜென்ட் நாய்ஸ் ரிடக்சன் சிஸ்டம் உள்ளதால் இதன் மூலம் மிகத் துல்லியமான வீடியோவை எடுக்கலாம். அதே நேரத்தில் இதில் வீடியோ எடுக்கும் போது வெளிப்புறத்திலிருந்து வரும் இரைச்சல் கேட்காது.

இதில் இருக்கும் மல்டி ப்ராசஸ் என்ஆர் போட்டோக்களில் ப்ரைட்னஸ் போன்றவற்றைப் பார்த்துக் கொள்ளுகிறது. மேலும் இதில் இருக்கும் லெய்க்கா டிசி வாரியோ சுமிலக்ஸ் லென்ஸ் மிகத் துல்லியமான போட்டோக்களை எடுக்க உதவுகிறது.

இந்த லுமிக்ஸ் கேமரா 3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இதில் இருக்கும் ஸ்டீரியோ மைக்ரோபோன்கள் இந்த கேமரா எடுக்கும் வீடியோ மற்றும் ஆடியோவிற்கு உயர்ந்த தரத்தை வழங்குகிறது.

மேலும் இந்த கேமரா ஒரு கிரியேட்டிவ் கண்ட்ரோல் மோட் என்ற தொழில் தொழில் நுட்பத்துடன் வருகிறது. இந்த கண்ட்ரோல் மோட் 16 வகையான பில்டர் வசதிகளை வழங்குகிறது.

இன்னும் பல சூப்பரான அம்சங்களைக் கொண்டு வரும் இந்த லுமிக்ஸ் கேமரா ரூ.25,000 முதல் ரூ.30,000க்குள் விற்கப்பட இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்