Home
Camera

பானாசோனிக் வழங்கும் பல்திறன் கொண்ட புதிய கேமரா!

By Karthikeyan
பானாசோனிக் வழங்கும் பல்திறன் கொண்ட புதிய கேமரா!

கேமரா தொழில் நுட்பத்தில் ஊறித் திளைத்த பானாசோனிக் நிறுவனம் இப்போது ஒரு புதிய கேமராவைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய கேமராவின் பெயர் பானாசோனிக் லுமிக்ஸ் டிஎம்சி-டிஸட்30 ஆகும். இந்த கேமரா பல வேலைகளை செய்யும் ஆற்றல் படைத்தது. இந்த கேமரா டிஎம்சி டிஸட்20 கேமராவிற்கு அடுத்ததாக வருகிறது.

புதிய பனோசோனிக் கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 20எக்ஸ் லெய்க்கா சூம் லென்ஸ். கொண்டுள்ளது. இந்த லென்சின் சூம் ரேஞ்ச் 480 மிமீ ஆகும். மேலும் உயர்தரமான டைனமிக் ரேஞ்ட் மோட் கொண்ட 14 மெகா பிக்சல் எம்ஒஎஸ் சென்சாரையும் இந்த கேமரா வைத்திருக்கிறது.

இந்த கேமராவில் 3 இன்ச் அளிவில் ஒரு எல்சிடி திரை (460000 டாட்) உள்ளது. இந்த திரையின் அகல அளவு 24 மிமீ ஆகும். மேலும் இந்த கேமரா 360 டிகிரி ஆங்கிளையும் கொண்டிருக்கிறது. இதன் சட்டர் வேகம் 15 வினாடி ஆகும். மெமரி சேமிப்புக்காக இந்த கேமரா எஸ்டி/எஸ்எச்டிசி/எஸ்டிஎக்ஸ்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கேமராவின் இமேஜ் ரிசலூசன் 4320 x 3240 ஆகும். அதுபோல் இதன் வீடியோ ரிசலூசன் 1920 x 1080 ஆகும். அதுபோல் இந்த கேமராவில் ஒரு பில்ட் இன் ஜிபிஎஸ் யூனிட்டும் உள்ளது.

மேற்சொன்ன முக்கிய அம்சங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த கேமரா மிகத் துல்லியாமான அதே நேரத்தில் மிகத் தெளிவான படங்களை எடுக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக வெளிச்சம் குறைந்த இடங்களிலும் இது மிகத் தெளிவான படங்களைத் தரும். வரும் ஏப்ரலில் இந்த கேமரா விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பனோசோனிக் கேமராவின் விலை ரூ.18,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X