நவீன வசதிகளுடன் வரும் புதிய பானாசோனிக் கேமரா

Posted By: Karthikeyan
நவீன வசதிகளுடன் வரும் புதிய பானாசோனிக் கேமரா

பானாசோனிக் நிறுவனம் சமீபத்தில் தங்களது லுமிக்ஸ் டிஎம்சி-ஜி3 இன்டர் சேன்ஞ்சபுள் லென்ஸ் கேமராவில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த கேமரா பனோசோனிக்கின் 3ஜி கேமரா ஆகும். இந்த கேமரா இப்போது முழுமையாக புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் வருகிறது. புகைப்படத் துறையில் இருப்பவர்களின் தேவைகளைக் கண்டிப்பாக இந்த கேமரா நிறைவு செய்யும்.

இந்த புதுப்பிக்கப்பட்ட லுமிக்ஸ் கேமராவின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் இந்த கேமரா 16 மெகா பிக்சல் இமேஜ் சென்சாரைக் கொண்டுள்ளது. அதுபோல் 3 இன்ச் எல்சிடி தொடுதிரையைக் கொண்டுள்ளது. மேலும் வீடியோ பட்டனுடன் கூடிய 1080பி வீடியோவை பதிவு செய்யும் வசதியையும் இந்த கேமரா வழங்குகிறது. மேலும் இதில் எலக்ட்ரானிக் வியூவ் பைன்டரும் உண்டு. இந்த கேராவின் மொத்த பரப்பு 4.54 இன்ச் x 3.29 இன்ச் x 1.84 இன்ச் ஆகும். மேலும் இதன் மொத்த எடை 0.544 கிலோவாகும்.

இந்த லுமிக்ஸ் கேமரா மிகவும மெல்லியதாக இருக்கிறது. மேலும் டிஎஸ்எல்ஆர் கேமராவின் டிசைனைக் கொண்டிருக்கிறது. இந்த கேமரா எடை குறைந்து இருப்பதால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இது கருப்பு, ப்ரவுன் மற்றும் வெள்ளை என 3 வண்ணங்களில் வருகிறது. அதோடு இதன் திரையில் இருக்கும் ஐக்கன்கள் பெரிதாக உள்ளதால் அதைப் படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால் இதில் ஐ சென்சார் இல்லாததால் எல்சிடி மற்றும் இவிஎப் ஆகியவற்றை கைகளாலே இயக்க வேண்டியிருக்கும்.

இந்த கேமராவின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது முழுமையான மேனுவல், பாதி மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் போன்ற வசதிகளை வழங்குகிறது. அதனால் இந்த கேமராவை எல்லாவிதத்திலும் பயன்படுத்த முடியும். மேலும் இதன் எஎப் ட்ராக்கிங் மிகத் துல்லியமாக உள்ளது. மேலும் இந்த கேமராவை இயக்குவது மிக எளிதாக இருக்கும்.

இந்த பானாசோனிக் லுமிக்ஸ் கேமராவின் விலை ரூ.40000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot