Home
Camera

எதையும் தாங்கும் வலிமை கொண்ட ஒலிம்பஸ் கேமரா

By Karthikeyan
எதையும் தாங்கும் வலிமை கொண்ட ஒலிம்பஸ் கேமரா

ஒலிம்பஸ் நிறுவனம் தற்போது தனது ஒலிம்பஸ் டப் டிஜி-320 என்ற புதிய கேமராவைக் களமிறக்குகிறது. இந்த புதிய கேமரா நீர் தடுப்பு மற்றும் தூசு தடுப்பு போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது.

இந்த கேமரா 10 மீட்டர் ஆழ தண்ணீரில் விழுந்தாலும் அல்லது 5 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் இது பாதிப்படைவதில்லை. மேலும் இந்த கேமரா 14 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்திலும் இயங்கு சக்தி கொண்டது. அதனால் எந்த தட்பவெப்ப நிலையிலும் இந்த கேமரா அருமையாக இயங்கும் சக்தி கொண்டது.

மேலும் இந்த டப் கேமரா 14எம்பி சிசிடி சென்சார்களைக் கொண்டுள்ளதால் உயர் ரிசலூசன் கொண்ட படங்களையும் மிக எளிதாக எடுக்கும் சக்தி கொண்டது. மேலும் இந்த கேமரா 720பி எச்டி வீடியோவையும் சப்போர்ட் செய்யும்.

இந்த ஒலிம்பஸ் கேமராவை சட்டைப் பையில் வைத்து மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதன் எடை 5.47 அவுன்ஸ் மட்டுமே. இந்த கேமராவின் பரப்பு 3.79 x 2.50 x 0.89 ஆகும்.

அதனால் இந்த டிஜி-320 கேமரா ஒரு போர்ட்டபுள் கேமரா ஆகும். இதன் பேட்டரியை ரிசார்ஜ் செய்ய முடியும். மேலும் இதன் எச்டிஎம்ஐ போர்ட் மூலம் இதன் படங்களை பெரிதாக பார்க்க முடியும். மேலும் இந்த கேமரா எஸ்டி/எஸ்டிஎச்சி/எஸ்டிஎக்ஸ்சி போன்றவற்றுடன் கூடிய மெமரி கார்டைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஒலிம்பஸ் கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்க்கும் போது இது 2.7 எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பில்ட் இன் ப்ளாசும் உண்டு. மேலும் இந்த கேமரா ட்ரூபிக் III+ இமேஜ் ப்ராசஸரையும் கொண்டுள்ளது. அதன் ஆப்டிக்கல் சூம் 3.6 எக்ஸ் ஆகும். அதுபோல் இந்த கேமரா 28-102எம்எம் ஈக்குவலன்ட் லென்சுகளைக் கொண்டிருக்கிறது.

இந்த டப் கேமார 80-1600 ஐஎஸ்ஒ மற்றும் 14எம்பி 1/2.3 இமேஜ் சென்சாரும் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா தண்ணீர், அதிர்ச்சி மற்றும் தூசு மற்றும் குளிர் போன்ற இயற்கை காரணங்களால் பாதிப்பு அடையாத அளவிற்கு மிகவும் உறுதியாக உள்ளது.

இந்த ஒலிம்பஸ் கேமரா இந்த மாதத்திற்குள் விற்பனைக்கு வந்துவிடும். இது கருப்பு மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் வருகிறது. இதன் விலை ரூ.9,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X