Home
Camera

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ஒலிம்பஸ் கேமரா!

By Karthikeyan
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ஒலிம்பஸ் கேமரா!

கேமரா உலகில் ஒலிம்பஸ் நிறுவனத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜப்பானைச் சேர்ந்த இந்த நிறுவனம் புகைப்படம் எடுக்கும் தொழில் செய்வோர் மட்டும் அல்லாது கேமராவைப் புதிதாகப் பார்ப்பவர்கள் வரை அனைவருக்கும் தக்க விதமாக ஏராளமான கேமராக்களைக் களமிறக்கி இருக்கிறது.

இப்போது இந்த ஒலிம்பஸ் ஒரு புதிய அடக்கமான கேமராவை களமிறக்குகிறது. இந்த புதிய கேமராவின் பெயர் ஒலிம்பஸ் எஸ்ஸட்-31 எம்ஆர் ஆகும். அதாவது இந்த புதிய கேமரா பழைய மாடலான எஸ்ஸட்-30 எம்ஆர் கேமராவின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.

இந்த புதிய ஒலிம்பஸ் சில முக்கியமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. முதலில் பார்த்தால் இந்த கேமரா 16 மெகா பிக்சல் பேக் லிட் சிஎம்ஒஎஸ் சென்சாரைக் கொண்டிருக்கிறது. இதன் ஆப்டிக்கல் சூம் 24எக்ஸ் சூம் (25-600 மிமீ) ஆகும். இதில் ட்ரூபிக் வி இமேஜ் ப்ராசஸரும் உள்ளது.

அடுத்ததாக இந்த புதிய ஒலம்பஸ் கேமரா இன்டக்ரேட்டட் 3 இன்ச் எல்சிடி திரை (920000) மற்றும் 6400 ஐஎஸ்ஒ கொண்டுள்ளது. இந்த கேமராவில் வினாடிக்கு 30 ப்ரேம்கள் வீதம் 1080பி வீடியோவை பதிவு செய்ய முடியும். மேலும் இன்டர்னல் ப்ளாஷ், மேனுவல் மற்றும் ஆட்டோ போக்கஸ் அடுத்ததாக ரிசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் போன்ற வசதிகளை இந்த கேமரா பெற்றுள்ளது.

இந்த புதிய ஒலிம்பஸ் கேமரா கருப்பு அல்லது வெள்ளி போன்ற நிறங்களில் மிக அழகாக இருக்கிறது. இது மிகவும் அடக்கமாக இருப்பதால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்லவும் முடியும்.

இந்த கேமரா மிகத் தெளிவாக அதே நேரத்தில் மிகத் துல்லியமாகப் படங்களை எடுக்கும். அதனால் படம் எடுக்கும் போது கேமரா அசைந்தாலும் படம் மிகத் தெளிவாக இருக்கும்.

இந்த ஒலிம்பஸ் கேமராவின் விலை ரூ.20,000 ஆகும். ஏப்ரல் மாதம் விற்பனைக்கு இந்த கேமரா வரும் என்று தெரிகிறது. ஆன்லைன் மூலமாகவும் இந்த கேமராவை முன்பே வாங்க முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X