Home
Camera

12ஜிபி ரேம் உடன் களமிறங்கும் நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன்.!

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் 12ஜிபி ரேம் உடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, நுபியா நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் ரெட் மேஜிக் 3 என்ற ஸ்மார்ட்போனை 12ஜிபி ரேம் உடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

12ஜிபி ரேம் உடன் களமிறங்கும் நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன்.!

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

12ஜிபி ரேம்

12ஜிபி ரேம்

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 253ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து கேம் செயலிகளையும் ரெட் மேஜிக் 3 சாதனத்தில்
பயன்படுத்த முடியும்.

ஸ்னாப்டிராகன் 835சிப்செட்

ஸ்னாப்டிராகன் 835சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம். டிடிஎஸ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் ஆம்பிலிஃபியர் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிவேக ஆடியோ அனுபவம் கொடுக்கிறது.

24எம்பி ரியர் கேமரா

24எம்பி ரியர் கேமரா

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 24எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடமபெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி

பேட்டரி

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 3800எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ப்ளூடூத் 5.0 மற்றும் எம்ஐஎம்ஒ தொழில்நுட்பம், வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 3 key specifications confirmed: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X