Home
Camera

ஆன்ட்ராய்டு ஆற்றல் கொண்ட புதிய நிக்கான் கேமரா!

By Super

ஆன்ட்ராய்டு ஆற்றல் கொண்ட புதிய நிக்கான் கேமரா!
புதிய ஆன்ட்ராய்டு ஆற்றல் கொண்ட கேமராவினை வழங்குகிறது நிக்கான் நிறுவனம். ஆன்ட்ராய்டு ஆற்றல் கொண்ட ஸ்மார்ட்போன் என்பது அல்லாமல், ஆன்ட்ராய்டு ஆற்றல் கொண்ட கேமராவும் சந்தைக்கு வருகிறது.

ஆன்ட்ராய்டு கூல்பிக்ஸ் எஸ்-800 கேமரா, 3.5 ஓலெட் திரை வசதியினையும் கொண்டதாக இருக்கும். கேமராவிற்கு மிக சிறப்பான ஒன்றே அதன் திரை தான். இதனால் எடு்க்கும் புகைப்படக்களை முழுமையாக எடுக்க முடியும்.

இந்த கேமரா ஜிபிஎஸ் மற்றும் வைபை தொழில் நுட்பங்களுக்கும் சிறந்த வகையில் சப்போர்ட் செய்கிறது. 25-250 எம்எம் லென்ஸ் வசதியினை வழங்கும் இந்த கேமரா 16 மெகா பிக்ஸல் கொண்ட சென்ஸார் தொழில் நுட்பத்திற்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

கூல்பிக்ஸ் எஸ்-800 கேமராவில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த கேமராவில் கூகுள் ப்ளே வசதியினையும் பயன்படுத்தலாம்.

இந்த ஆண்டு நடந்த கன்ஸயூமர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் ஆன்ட்ராய்டு ஆற்றல் கொண்ட ஸ்மார்ட் கேமராவினை போலாராய்டு நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது.

இந்த கேமரா 3.2 இஞ்ச் திரையினையும், 16 மெகா பிக்ஸல் சென்ஸார் தொழில் நுட்பத்தினையும் கொடுக்கும். கூகுள் ப்ளே போன்ற வசதியினையும் இதில் பயன்படுத்த முடியும்.

போலாராய்டு நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட் கேமரா போன்ற சாதனங்களுக்கு, நிக்கான் நிறுவனம் வழங்கும் கூல்பிக்ஸ் எஸ்-800 கேமரா சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேமரா ஆகஸ்டு மாதம் 22ம் தேதி அறிமுகமாகும் என்று தகவல்கள் கூறுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X