Home
Camera

நிகோன் வழங்கும் புதிய 3 கூல் பிக்ஸ் கேமராக்கள்!

By Karthikeyan
நிகோன் வழங்கும் புதிய 3 கூல் பிக்ஸ் கேமராக்கள்!

கேமரா தயாரிப்பில் முன்னனி நிறுவனமான நிகோன் இப்போது புதிய ஸ்டைலான 3 எஸ் வரிசை டிஜிட்டல் கேமராக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேமராகக்களின் பெயர்கள் முறையே கூல்பிக்ஸ் எஸ்70, கூல்பிக்ஸ் எஸ்570 மற்றும் கூல்பிக்ஸ் எஸ்640 ஆகும்.

நிகோன் கூல்பிக்ஸ் எஸ்70 கேமராவின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கொண்டால் இது டச் ஸ்க்ரீன் எஸ்60ஐ ஒத்திருக்கிறது. ஆனால் இதில் உள்ள முக்கிய வித்தியாசம், இது அகலமான ஒஎல்இடி டச் பேனலைக் கொண்டுள்ளது. ஆனால் எஸ்60ஐப் போல் இந்த எஸ்70 இதன் பின்புறம் பட்டன்களைக் கொண்டிருக்கவில்லை.

இந்த கேமரா டச் இன்டர்பேஸ் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த கேமராவின் ரிசலூசன் 10.0 முதல் 12.1 மெகா பிக்சல்கள் ஆகும். மேலும் இது இருக்கக்கூடிய 720பி எச்டி வீடியோ ரிக்கார்டிங்கிற்கு மாற்றாக வந்துள்ளது. மேலும் இது 5 வழி விஆர் இமேஜ் ஸ்டெபிலைசேசன் கொண்டிருக்கிறது.

நிகோன் கூல்பிக்ஸ் எஸ்640 கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது தரமான செயல் திறனை வழங்குகிறது. இதில் ஆட்டோ போக்கஸ் வசதியும் உள்ளது. மேலும் இந்த கேமரா 0.7 வினாடிகளில் இயங்கத் தொடங்கிவிடும்.

மேலும் இதில் 12.2 மெகா பிக்சல் கொண்ட சிசிடி சென்சார் மற்றும் நிக்கர் லென்ஸ் போன்ற வசதிகளும் உள்ளன. மேலும் இந்த கேமரா ஆப்டிக்கல் ஸ்டெபிலைசேசனோடு 4 விஆர் இமேஜையும் வழங்குகிறது. மேலும் இது திரைப்படங்களை மிக நன்றாக ரிக்கார்ட் செய்யும். மேலும் இது ஒரு எடை குறைந்த கேமரா ஆகும். இதன் விலை ரூ.20000 ஆகும்.

இறுதியாக நிகோன் கூல்பிக்ஸ் எஸ்570 கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 12.0 மெகா பிக்சலைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 2.7 இன்ச் அளவில் உள்ளது. மேலும் இந்த கேமராவில் டாட் எல்சிடி மற்றும் 5எக்ஸ் நிக்கர் லென்சும் உள்ளது.

இதன் ஒலி அளவு 30 எப்பிஎஸ் ஆகும். அதுபோல் ஐஎஸ்ஒ 3200 சென்சிட்டிவிட்டி கொண்டுள்ளது. மேலும் இதில் 4 வழி விஆர் இமேஜ் ஸ்டெபிலைசேசன் மற்றும் 640x480 மூவி ரிக்கார்டிங் போன்றவையும் உள்ளன. இந்த எஸ்570 கேமராவின் விலை ரூ.18,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X