இந்தியாவில் நிக்கான் அறிமுகம் செய்துள்ள முன்று புதிய கேமிராக்கள்.!

|

சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிக்கான் நிறுவனம் இரண்டு மிர்ரர் இல்லாத கேமிரா மாடல்களான இசட்6 மற்றும் இசட்7 ஆகிய இரண்டு புல்பிரேம் மிர்ரர் இல்லாத கேமிராக்களை அறிமுகம் செய்தது. இரண்டு மாடல்களும் தோற்றத்தில் ஒரே போன்ற டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டிற்கும் சில முக்கிய வித்தியாசங்கள் உள்ளது. அதாவது மெகாபிக்சல், ஃபோகஸ் பாயிண்ட் மற்றும் ஐஒஎஸ் ஆகியவற்றில் சில மாற்றங்கள் உள்ளது. இந்த இசட்6 கேமிரா மாடலின் விலை ரூ. 1,69,950 என்றும் இசட்7 விலை ரூ.2,69,950 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டின் விலையும் பாடிக்கு மட்டுமே உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நிக்கான் அறிமுகம் செய்துள்ள முன்று புதிய கேமிராக்கள்.!


நிக்கான் இசட்7, இசட்6 மாடல்களின் சிறப்பு அம்சங்கள்:
அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இசட்7 மாடல் 45.7 மெகா பிக்சல் மிர்ரர் இல்லாத முழு பிரேம் சென்சாரை கொண்டது. அதுமட்டுமின்றி ஐஒஎஸ்-ஐ பொருத்தவரை குறைந்தது 64 முதல் 25000 வரை உள்ளது. மேலும் 493 ஆட்டோ போகஸ் தன்மை கொண்டது. அதேபோல் இசட்6 மாடலானது 24.5 மெகாபிக்சல் சென்சாரை கொண்டதுடன் 273 போகஸ் பாயிண்டுகளையும் ஐஒஎஸ் ரேஞ்ச் என்பது 100 முதல் 51200 வரை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய மிர்ரர் இல்லாத மாடல் கேமிராக்களில் மூலம் 4கே யூ.எச்.டி வீடியோக்களை 30fps முதல் முழு எச்.டி 120fps வரை படம் பிடிக்கலாம். மேலும் இந்த கேமிராக்களில் வைபை, புளூடூத் வி4.2, எச்.டி.எம்.ஐ மற்றும் யூஎஸ்பி போர்ட் ஆகிய கனெக்சன் அம்சங்களையும் கொண்டது.

இந்தியாவில் நிக்கான் அறிமுகம் செய்துள்ள முன்று புதிய கேமிராக்கள்.!


மேலும் மேற்கண்ட இரண்டு புதிய சாதனங்கள் அதிகபட்சமாக 55மிமீ மற்றும் குறைந்தபட்சமாக 16மிமீ தூரத்தில் வைத்து கூட படம் பிடிக்கலாம். ஏற்கனவே நிக்கான் டி.எஸ்.எல்.ஆர் வகை கேமிராக்களில் இந்த வசதிஉ உண்டு என்பது தெரிந்ததே. எனவே ஒரு பொருளை மிக அருகில் வைத்து படமெடுத்தாலும் துல்லியமாக படம் தோன்றும்

மேலும் இந்த இரண்டு புதிய சாதனங்களுடன் நிக்கான் நிறுவனம் மேலும் மூன்று புதிய லென்ஸ்களையும் இசட் சீரீஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இசட் 24-70 மிமீ லென்ஸின் விலை ரூ.78,450, a35 மிமீ f/1.8 மற்றும் ஒரு 50 மிமீ f/1.8 பிரைம் லென்ஸில் விலை ரூ.66,950 மற்றும் ரூ.50,950 முறையே நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இதனுடன் ஒரு FTZ அடாப்டரும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிக்கான் அறிமுகம் செய்துள்ள முன்று புதிய கேமிராக்கள்.!


இந்த கேமிராக்கள் மற்றும் லென்ஸ்கள் கோம்போ விலையிலும் கிடைக்கும். அதுகுறித்து தற்போது பார்போம்:


- நிக்கான் இசட்6 + 24-70 மிமீ f/4.0 லென்ஸ் ரூ. 2,14,950

- நிக்கான் இசட்6 + 24-70 மிமீ f/4.0 லென்ஸ் + FTZ அடாப்டர் Rs 2,26,950

- நிக்கான் இசட்6 + FTZ அடாப்டர் ரூ. 1,81,950

- நிக்கான் இசட்7 + FTZ அடாப்டர் ரூ. 2,81,950

- நிக்கான் இசட்7 + 24-70 மிமீ f/4.0 லென்ஸ் + FTZ adapter: ரூ. 3,26,950

- நிக்கான் இசட்7 + 24-70 மிமீ f/4.0 லென்ஸ் ரூ.3,14,950

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nikon launches Z6 Z7 full frame mirrorless cameras in India along with three new lenses: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X